India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் அருகே சத்திர ரெட்டியாபட்டி சோதனை சாவடியில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு நிலையான கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது பறக்கும் படையினர் சோதனையிடும் பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆட்சியரின் ஆய்வால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர்.
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு முன்னிலையில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்கு பதிவு செய்து வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கப்பட்டது.
விருதுநகர் அருகே நடுவப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி(63). இவர் தேநீர் அருந்துவதற்காக நேற்று எட்டூர் வட்டம் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கார் மோதியதில் முதியவர் ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வச்சகாரப்பட்டி காவல்துறையினர் கார் ஓட்டுநர் சண்முக சுப்பு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் நீச்சல் குளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைசிறந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 5 கட்டங்களாக 12 நாட்கள் நடைபெற உள்ள இந்த நீச்சல் பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சிய ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே விளாம்பட்டி காமராஜர் காலணியை சேர்ந்தவர் யுவராஜ். நேற்று இவர் தனது மனைவியுடன் கிராமத்தில் நடக்கும் திருவிழா பார்க்க சென்றபோது சுவாமி ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் யுவராஜின் மனைவியை இடித்துள்ளனர். இதை தட்டிகேட்ட யுவராஜை முத்து இருளப்பன், ஈஸ்வரன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கினர். காயமடைந்த யுவராஜ் அளித்த புகாரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மீறி வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகாசி மாநகர் பகுதியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிகள் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர் முழுவதும் காலை முதல் இரவு வரை ஒவ்வொரு வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அப்போது மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து வருகின்றனர்.
சிவகாசி அருகே சங்கரலிங்காபுரம் அங்கன்வாடி மைய ஆசிரியை ஜெய்லானி கிராம மக்களிடையே வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், வாக்கிற்கு பணம் வாங்க கூடாது என்பதை வலியுறுத்தியும் பாதைகளை கையில் ஏந்தியபடி கிராம மக்களுக்கு விளக்கி தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இவரது முயற்சி பாராட்டை பெற்றுள்ளது.
விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட அய்யனார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பில்டிங் காண்ட்ராக்டர் சண்முகையா (70). இவருக்கு சொந்தமாக 7 தகர சீட் போட்ட குடிசை வீடுகள் உள்ளது. இந்நிலையில் இன்று வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது.இதுகுறித்து தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரு விபத்து தவிர்க்கப்பட்டது.இச்சம்பவம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியின் பின்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சார்ந்த சூர்யா என்பவர் நேற்று செப்டிக் டேங்கர் கிளீனிங் லாரியில் மனிதக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளார். தகவல் அறிந்த கூரைக்குண்டு ஊராட்சி செயலர் மீனாட்சி பணியாளர்களுடன் சென்று சூர்யாவை டேங்கர் லாரியுடன் பிடித்து சூலக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் காவல் துறையினர் சூர்யா என்பவரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.