India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(45). இவர் குமஸ்தா வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தெய்வனையை தவறாக பேசிய புகாரில், வினோத்தை ஸ்ரீவி. நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மாரிமுத்து புகாரை வாபஸ் பெறுமாறு வினோத் மிரட்டி உள்ளார். கடந்த 2ம் தேதி இரவு மாரிமுத்துவை கத்தியால் குத்தி வினோத் கொலை செய்தார். அவரை போலீஸார் தேடி வந்த நிலையில், நேற்றிரவு வினோத்தை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்ட பாராளுமன்றத் தொகுதி வாக்கு பதிவு ஒரு மணி நிலவரப்படி 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக விருதுநகர் தொகுதியில் 40.19% வாக்குகளும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 39.33% வாக்குகளும், திருமங்கலம் தொகுதியில் 41.70% வாக்குகளும், சாத்தூர் தொகுதியில் 44.32% வாக்குகளும், சிவகாசி தொகுதியில் 36.14% வாக்குகளும், அருப்புக்கோட்டை – தொகுதியில் 41.31% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட
ஆட்சித்தலைவருமான வீ.ப.ஜெயசீலன் விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூரைக்குண்டு அரசு தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இன்று(19.04.2024) தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவின் போது ஏதேனும் குறைகளோ அல்லது புகார் இருந்தால், அது குறித்து 1800 425 2166 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும், 04562- 252100, 221301, 221302, 221303, மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 1950, 0452-234600, என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தகவல் தெரிவித்துள்ளார்.
தாயில்பட்டி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் முருகராஜ் (38).இவருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் மடத்துப்பட்டியில் இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் மோட்டார் ஸ்விட்ச் ஆன் செய்த போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில்
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று ஏப்ரல் 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.
2019 மக்களவைத் தேர்தலில், விருநகர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று எம்.பியானார். இவர், மொத்தம் 4,70,883 (43.8%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான உமையொருபாகம் 789 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாடக சாலை தெரு திருவேங்கடமுடையான் சன்னதியில் ராமர், சீதை, லட்சுமணன் எழுந்தருளினர். அங்கு ராமநவமி வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.