Virudunagar

News April 24, 2024

வத்ராப்: மனைவி தம்பியை குத்திய கணவர் 

image

வத்திராயிருப்பு அருகே மேல கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசுப்பிரமணியன்.
இவரது அக்காவை ஜெயராம் என்பவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளனர். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்,ஜெயராம் தனது மனைவியை சேர்த்து வைக்க கோரி ஞானசுப்ரமணியனிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார். வத்திராயிருப்பு போலீசா நேற்று வழக்குப் பதிந்து விசாரணை.

News April 22, 2024

விருதுநகர் அருகே விபத்து; மரணம் 

image

அருப்புக்கோட்டை ஜெயராம் நகரை சேர்ந்தவர் நாகசுந்தரேஸ்வரன் (18).காந்தி நகரில் உள்ள தனியார் டிசைனர் கம்பெனியில் வேலை செய்து வந்த நாகசுந்தரேஸ்வரன் கம்பெனியிலிருந்து நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.திடீரென நாய் குறுக்கே வந்ததால் பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து நாகசுந்தரேஸ்வரன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.தாலுகா போலீசார் நேற்று ஏப்ரல் 21 வழக்கு பதிந்துள்ளனர்.

News April 22, 2024

தடபுடலாக தயாராகும் சித்திரை திருவிழா பொருட்காட்சி!

image

சிவகாசியில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வரும் 30ஆம் தேதி துவங்க உள்ளது. இதையொட்டி வரும் 26ம் தேதி முதல் சித்திரை திருவிழா பொருட்காட்சி துவங்க உள்ளது. விளாம்பட்டி சாலையில் நடைபெறவுள்ள பொருட்காட்சிக்கான ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியில் பொதுமக்களை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக மெகா வடிவ ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற உள்ளது.

News April 21, 2024

விருதுநகர்: மகள் மாயம்.. தந்தை புகார்

image

விருதுநகர் கந்தபுரம் பகுதியைச் சார்ந்தவர் சேதுராமசாமி (67). இவரது மகள் ஹரிப்பிரியா(27). இவருக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி காலை தட்டச்சு பயிற்சி செல்வதாக கூறிச் சென்ற ஹரி பிரியா தற்போது வரை வீடு திரும்பவில்லை. எனவே மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் சேது ராமசாமி இன்று புகார் அளித்துள்ளார்.

News April 21, 2024

விருதுநகரில் மின்தடை

image

விருதுநகர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பழைய பஸ் நிலையம், மேலரதவீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி, பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.

News April 21, 2024

விருதுநகர் அருகே கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு இன்று விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்து வருகின்றனர்.

News April 21, 2024

விருதுநகர் அருகே பெண் மீது தாக்குதல் 

image

அருப்புக்கோட்டை வேல்முருகன் காலனியைச் சேர்ந்தவர் பூமிநாதன் என்பவர் வந்து மனைவி நாச்சி (46). இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் தங்கப்பாண்டி என்பவருக்கும் குழாய் பதிப்பதற்காக சாலையில் குழி தோண்டியதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் தங்கப்பாண்டி குடும்பத்தார் ஐந்து பேர் சேர்ந்து நாச்சியை தாக்கியதாக கூறப்படுகிறது. டவுன் போலீசார் நேற்று ஏப்ரல் 20 வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 21, 2024

விருதுநகர்:இளைஞர் மீது தாக்குதல்

image

திருச்சுழி அருகே வளையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (28). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாயக்கண்ணன் ஊரில் உள்ள கன்மாயில் குளிக்க சென்ற போது அவரை வழிமறித்த சுப்புராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. திருச்சுழி போலீசார் நேற்று ஏப்ரல் 20 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 20, 2024

ராஜபாளையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை கைது

image

ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த 14 வயது மாணவி இதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவருக்கு சிங்கராஜாக்கோட்டை தெருவைச் சோ்ந்த வைரஜோதி மகன் சூா்யா வயது (22) பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் ஏப்ரல் 19 ம் தேதி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

News April 20, 2024

விருதுநகர் அருகே விபத்து; சம்பவ இடத்தில்  மரணம் 

image

சிவகாசி தென்றல் நகரை சேர்ந்தவர் சித்திரைஜோதி 75. இவர் நேற்று சிவகாசி சிறுகுளம் பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த கிரேன் சித்திரை ஜோதியின் மீது பலமாக மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் கிரீன் ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!