India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் அருகே தம்பநாயக்கன்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன்.இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருத்தபாண்டி முருகன் முனியசாமி ஆகியோர் ஒன்று சேர்ந்து நாட்டாமை ராஜாராம் என்பவரை மாற்ற சொல்லி தகராறு செய்து வந்துள்ளனர்.இதற்கு பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 2023- 2024 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெரும் மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று விருதுநகர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மே 1ஆம் தேதி உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உரைத்த நாள், தொழிலாளர் தினம், பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள், எட்டு மணி நேர வேலை என்று அறிவிக்கப்பட காரணமாக இருந்த நாளில் மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் மதுபானக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஓட்டுப்பதிவு நாள் வரை மட்டும் சி விஜில் செயலி, ஆன்லைன், தொலைபேசி ஆகியவை வாயிலாக 3,278 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதி பெற்ற புகார்களாக எடுக்கப்பட்ட 3059 புகார்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அலுவலர்கள் ஆப்சென்ட் ஆகினர் . விருதுநகர் மாவட்டத்தில் 9243 அலுவலர்கள் தேர்தல் பணிக்கு ஓட்டு சாவடி தலைமை அலுவலர் 1, அலுவலர் 2, 3 என்ற பணி நிலைகளில் நியமிக்கப்பட்டனர். 7206 பணியிடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் கூடுதலாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் 117 அலுவலர்கள் வரை பல்வேறு நிலைகளில் ஆப்சென்ட் ஆகினர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும் போது, ட்ரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் தாக்கி கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் கல்யாண குமார் (19) இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து ஸ்ரீவிருதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளி சுனில் குமார்(22). இவர் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது குப்பைகளை எரிப்பதற்காக டீசலை பயன்படுத்தும் பொழுது எதிர்பாராத விதமாக டீசல் கேன் வெடித்ததில் சுனில் குமார் மீது தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விருதுநகர் சிவகாசி சாலையில் இன்று ஆமத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது, தனியார் உணவகம் அருகே அனுமதி இன்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக குமாரலிங்கபுரம் பகுதியைச் சார்ந்த சந்திரன் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழாயிரம்பண்ணை பாண்டியாபுரம் செல்லும் சாலையில் குடியிருப்பு அருகே குப்பைகளை கொட்ட ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு அப்பகுதியினர் குப்பைகளை கொட்டுகின்றனர்.ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குப்பைகளை அள்ளப்படாமல் சுகாதாரக்கேடு ஏற்பட்டு துர்நாற்றமும் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.