India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் சிவன் கோவிலில் வசித்து வருபவர் தேன் காமேஸ்வரன்(27). இவரது மனைவி பஞ்சவர்ணம்(27). இந்நிலையில் தேன் காமேஸ்வரன் அதிக மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக மனவேதனையில் இருந்த தேன் காமேஸ்வரன் கடந்த 24 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து பஜார் காவல்துறையினர் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டிராக்டர்கள் மூலம் சர்வீஸ் ரோட்டின் ஓரங்களில் உள்ள செடிகளுக்கு நீர் இறைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வாட்டி வதைத்து வரும் அனல் காற்று பாதிப்பில் இருந்து ஓரளவுக்கு செடிகளை காப்பதற்காக இந்த பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது இந்த பணிக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.
விருதுநகர் ஆணை கூட்டம் சாலையில் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது அரசு பேருந்தை வழிமறித்த ஆனை கூட்டம் பகுதியைச் சார்ந்த வசந்தகுமார் என்ற இளைஞர் கீழே கிடந்த கற்களை எடுத்து பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளார். மேலும் அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரை தரக்குறைவாக பேசியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வசந்தகுமாரை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே இளங்கோவன் தெரு பகுதியில் இன்று கிழக்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சேதுராமன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சேதுராமன் என்பவரை கைது செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அவரிடம் இருந்த 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு ஊர்வலம் டீன் சீதாலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலம் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் செவிலியர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
திருச்சுழி அருகே இசலி கிராம நிர்வாக அலுவலர் குணசுந்தரி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ள மதுபான கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதித்ததில் அதில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக 300 மூடைகளில் கூழாங்கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இது குறித்து நரிக்குடி போலீசார் லாரியை பறிமுதல் செய்து இருவர் மீது நேற்று ஏப்ரல் 24 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திருச்சுழி அருகே இசலி கிராம நிர்வாக அலுவலர் குணசுந்தரி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ள மதுபான கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதித்ததில் அதில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக 300 மூடைகளில் கூழாங்கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இது குறித்து நரிக்குடி போலீசார் லாரியை பறிமுதல் செய்து இருவர் மீது நேற்று ஏப்ரல் 24 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம், குழந்தைகள் நலத்துறை மற்றும் மனநல துறை சார்பாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு சிறப்பு குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் குழந்தைகளின் பல்வேறு திறமைகளை பார்வையிட்டார்.
விருதுநகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மகாலட்சுமி கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். இது தொடர்பாக இழப்பீடு கோரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து நீதிபதி ஹேமந்தகுமார் கடந்த 2023 ஆம் ஆண்டு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். தற்போது வரை இழப்பீடு வழங்காததால் நேற்று ஜீப் ஜப்தி செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என நகராட்சி சுகாதார அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்ததோடு பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சள் பை பயன்படுத்தவும் அறிவுறுத்தினர்.
Sorry, no posts matched your criteria.