India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர், காரியாபட்டி என்.ஜி.ஓ நகர் பகுதியில் கோடை வெயிலை தவிர்க்க நண்பர்கள் சார்பாக சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நீர், மோர் பந்தலினை காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே.செந்தில் மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் ஆகியோர் இன்று திறந்து வைத்து. பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி தண்ணீர் வழங்கினார்கள்.
அருப்புக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (25). கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஜெயக்குமாருக்கும் தம்மாந்தெருவை சேர்ந்த அம்பரேஷ் (27) என்பவருக்கும் இடையே பார்சல் டெலிவரி செய்வது தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி சரமாரியாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.டவுன் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
திருச்சுழி அருகே மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் பாண்டி (33). இந்நிலையில் பாண்டி தொட்டியாங்குளம் கிராமத்தில் நாடகம் பார்க்கச் சென்றதாகவும், அப்போது நாடக மேடை அருகே வைத்து தொட்டியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து பாண்டியை கட்டையால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாண்டி புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் அந்தந்த வட்டார வள மையத்தில் நடைபெற உள்ளது. வரும் மே 1 முதல் மே 11 வரை ஓவியம், கலை, போஸ்டர் தயாரித்தல், இணைய வழி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற உள்ளன. எனவே பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற மாணவர்களுக்கு ஆட்சியர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காரியாபட்டி அருகே சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேனேஜிங் டிரஸ்டி திருமதி சினேகா லதா பொன்னையா உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விருதுநகர் அருகே சூலக்கரை திரு.வி.க தெருவை பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கோதை ஆண்டாள். இவர் இன்று காலை வீட்டு வாசலின் முன்பு தண்ணீர் தெளித்து கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது தொடர்பாக மூதாட்டி கோதை ஆண்டாள் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகரின் பசுமையான கிழக்குப் பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது செண்பகத் தோப்பு அருவி. இது உள்ளூர் வாசிகளின் குற்றாலமாக இருந்து வருகிறது. இதிலிருந்து வரும் சிற்றோடைகள், சிறிய நீர்வீழ்ச்சிகள் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது. இதன் வனப்பகுதி மேகமலை புலிகள் சரணாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வனத்திற்குள் கலந்து இருப்பதால் ரம்மியமாக காட்சியளிக்கிறது செண்பகத் தோப்பு.
அருப்புக்கோட்டையில் சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவு வெள்ளரிக்காய் விவசாயம் நடைபெறுவதால் வெயிலின் வெப்பத்திலிருந்து காக்க பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிக்காய் வாங்கி செல்கின்றனர்.பஜார் பகுதியில் விவசாயிகள் சாலையோரம் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்கின்றனர்.ஒரு கட்டு வெள்ளரிக்காய் ரூ.10 முதல் ரூ.20 வரை இன்று விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் வாசுதேவன்(47) என்பவர் கட்டிட வரைபட அனுமதிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அவரிடம் கட்டிட வரைபட அனுமதிக்கு ஒப்புதல் வழங்க நகரமைப்பு ஆய்வாளர் ஜோதிமணி (56), ரூ.10000 லஞ்சம் கேட்டதின் அடிப்படையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் பணத்தை கொடுக்கும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜோதிமணியை கைது செய்தனர்.
திருச்சுழி அருகே தொட்டியாங்குளத்தைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு(23). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக பிரதீப் தூண்டுதலின் பேரில் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து தினேஷ் பாபுவை தாக்கியதாக கூறப்படுகிறது. திருச்சுழி போலீசார் நேற்று 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.