Virudunagar

News April 18, 2025

8வது இடம் பிடித்த விருதுநகர் – 304 மாணவர்கள் தேர்ச்சி

image

மத்திய அரசால் தேசிய திறனாய்வு தேர்வு 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆகிய வகுப்புகளுக்கு மாதம் தோறும் ரூ1000 வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான தேர்வில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 6,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 304 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 8வது இடத்தை பிடித்துள்ளது.

News April 18, 2025

பள்ளி சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

image

விருதுநகரை சேர்ந்த பள்ளி சிறார்கள் இருவரை பிளக்ஸ் பேனர் அமைக்கும் பணிக்காக அழைத்து வந்த சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்த சாம் டேவிட் (25) என்பவர் மாணவர்களுக்கு குளிர்பானத்தில் போதை மாத்திரையை கலந்து கொடுத்து இருவரையும் நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை அளித்ததாக அவர் மீது ஏப்.15 அன்று போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கோவையில் பதுங்கி இருந்த சாம் டேவிட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News April 18, 2025

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள்

image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த கல்லூரி மாணவர்களான இந்திரகுமார் (21), லோகேஷ் (20) இருவரும் சிவகாசியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஏப்.16ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டியில், இருவரும் சென்ற பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

News April 17, 2025

விருதுநகரில் சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு

image

சர்வதேச கூட்டுறவு ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட பொதுமக்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், துறை அலுவலர்களிடமிருந்து கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பாடல், இசையமைக்கப்பட்டு, 5 நிமிடங்கள் ஒலிப்படப்ப கூடிய வரையில் இருக்க வேண்டும். இதில், சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பண முடிப்பு வழங்கப்படும். பாடலை tncu08@gmail.com மின்னஞ்சலில் மே 30க்குள் அனுப்ப வேண்டும்.

News April 17, 2025

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவி கோபுரம்

image

இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற உள்ளது. இதில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில் கல்லறை மீது கோவில் கோபுரங்களை வரைந்தது தவறான செயல். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

விருதுநகர் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த KKSSR

image

விருதுநகரில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆட்சியர் ஜெயசீலன் உதவி செய்தார். இதில் மக்களின் குறையறிந்து அக்குறைகளைக் கடமையென எண்ணிச் சேவையாற்றுவதே அரசுப் பணியாளர்களின் கடமை. அத்தகைய கடமையைச் சிறப்பாகச் செய்து வரும் ஆட்சியர் ஜெயசீலனுக்கு வாழ்த்துகள் என அமைச்சர் KKSSR தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News April 17, 2025

விருதுநகர் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த சு.வெங்கடேசன்

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆட்சியர் ஜெயசீலன் உதவி செய்தார். இதில் அதிகாரத்தில் உள்ளவர்கள் செயல்பட எவ்வளவோ களங்களும், தேவைகளும் உள்ளது. அதை உணர்ந்து செயல்படுகிறவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆட்சியர் ஜெயசீலனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

விருதுநகர் மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04562 – 252600, 252601, காவல் -100, விபத்து -108 ,தீ தடுப்பு – 101,குழந்தைகள் பாதுகாப்பு -1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091, குழந்தைத் தொழிலாளர் -55214, 1800 4252 650, சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு -9443967578 ஆகிய உதவி எண்களில் அழைக்கலாம்.

News April 16, 2025

ராஜேந்திரபாலாஜி மீது ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

image

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் அளித்த புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்தனர். மேல்விசாரணைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதியளித்த நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2ல்ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

News April 16, 2025

விருதுநகரில் 600 மாணவர்கள் முகத்தில் மலர்ந்த புன்னகை

image

விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட மாணவர்களுக்கு மலரும் புன்னகை என்ற திட்டத்தின் கீழ் பல் கிளிப் (BRACES) பொருத்தும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு ரூ.30,000 வரை செலவாகும் நிலையில் இத்திட்டத்தில் 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பல் கிளிப் பொருத்தப்பட்டது. இத்திட்டம் சிறப்பாக பலன் அளித்துள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!