Virudunagar

News March 25, 2024

விருதுநகரில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

விருதுநகர் கேகேஎஸ்எஸ்என் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(41). இவர் பந்தல் போடும் தொழிலாளியாக உள்ளார். இந்நிலையில் மன வேதனையில் இருந்த மணிகண்டன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரர் சக்திவேல்(57) கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 25, 2024

விருதுநகர் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான ஜெயசீலனிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News March 25, 2024

விருதுநகர் தேமுதிக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான ஜெயசீலனிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி,அதிமுக நிர்வாகிகள்,தேமுதிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News March 25, 2024

விருதுநகர்: சரத்குமார் கலகலப்பு பேட்டி

image

ராதிகா சரத்குமார் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.உடன் சரத் குமாரும் பிரச்சாரம் செய்து வருகிறதா.சரத் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் சூர்யவம்சம் படத்தில் எப்படி நான் படிக்காமல் தேவயானியை கலெக்டர் ஆக்கினேனோ,அது போல் ராதிகாவை வெற்றி பெற வைப்பேன் என்கிறார்.மேலும் மக்களுக்கு உண்மையாக உழைப்போம் என்றார்.

News March 25, 2024

விருதுநகரில் நான்கு கட்சிகள் இன்று வேட்பு மனு தாக்கல்

image

விருதுநகர் தொகுதியில் நான்கு முனை போட்டி நடைபெறும் நிலையில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கௌஷிக் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.வேட்புமனு தாக்கல் செய்யும்போது உடன் செல்ல ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

News March 24, 2024

விருதுநகர் அருகே கார் விபத்து

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் பாண்டி. இவர் நேற்று பைக்கில் ஸ்ரீவி – ராஜபாளையம் சாலை, மடவார்வளாகம் பகுதியில் சென்றபோது, ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த கார் தங்கவேல்பாண்டி மீது மோதியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் கார் ஓட்டி வந்த மாங்குடி பாண்டியராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 24, 2024

விருதுநகர்: சர்ப்ரைஸ் கொடுத்த கலெக்டர்…

image

விருதுநகர் மாவட்டம் அழகாபுரி அருகே நடைபெற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு நூறு சதவிகித வாக்கு பதிவு என்பதை வலியுறுத்தி பேசினார். பின்பு இதுவரை நடந்த தேர்தல்களில் தவறாமல் வாக்கு பதிவு செய்து அதிக முறை ஜனநாயக கடமையாற்றிய முதியவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவம் செய்தார்.

News March 24, 2024

விருதுநகர் அருகே ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலான பேச்சி அம்மன் கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன்.சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

News March 24, 2024

விருதுநகர்:ஆடு வெங்காயத்தை தின்றதால் ஏற்பட்ட பிரச்சனை

image

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசி (33).பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையில் இருந்த வெங்காயத்தை வீரம்மாள் என்பவர் வளர்த்து வரும் ஆடுகள் தின்றுவிட்டதாகவும்,இதனால் ஆடுகளை விரட்டியதால் ஆத்திரமடைந்த வீரம்மாள் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து மலையரசியை தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தாலுகா போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 24, 2024

விருதுநகர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

விருதுநகர் அருகே மூடியனுர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (21). இவர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் காரியாபட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பாண்டியன் நகர் பகுதியில் எதிரே வந்த காரின் மீது இருசக்கர வாகன மோதியதில் இளைஞர் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு.

error: Content is protected !!