Virudunagar

News June 3, 2024

சிவகாசியை அதிர வைத்த கொலை

image

சிவகாசி முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்துப்பாண்டி (38). இவர் இன்று இரவு சிவகாசி அண்ணா காலனி பகுதியில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு கொலை செய்த மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 3, 2024

வத்திராயிருப்பு:வனத்துறை அறிவுறுத்தல்

image

வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனினும் நேற்று மாலை முதல் வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால்,பக்தர்கள் சதுரகிரி வருவதை தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும்,அனுமதிக்கப்பட்ட நாட்களில் தினசரி மழைப்பொழிவு மற்றும் ஆறுகளில் நீர்வரத்தை பொறுத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.

News June 3, 2024

விருதுநகர்:நாளை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை

image

விருதுநகர் லோக்சபா தொகுதியில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்தூர்,திருப்பரங்குன்றம்,திருமங்கலம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதி தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில் ஓட்டு என்னும் மையத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும் 252 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். அதிகபட்சமாக 23 சுற்றுகள் வரை ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

News June 3, 2024

விருதுநகர் அருகே விழாவிற்கு சென்றபோது ஏற்பட்ட விபத்து

image

திருச்சுழி அருகே மேல கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன் (45). முத்தன் தனது உறவினர் காதணி விழாவிற்காக தனது மனைவி & 10 வயது மகனுடன் பைக்கில் பனைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.‌ அப்போது மைலி பஸ் ஸ்டாப் அருகே எதிரே வந்த பைக் மோதி முத்தன் அவரது மனைவி மற்றும் மகன் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.விபத்து குறித்து திருச்சுழி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

News June 2, 2024

விருதுநகரில் விஜயபிரபாகருக்கு வெற்றி வாய்ப்பு?

image

விருதுநகர் மக்களவை தொகுதியில் வெற்றியை பெறுவதில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு இடையே போட்டிகள் கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விருதுநகரில் விஜய பிரபாகரன் வெற்றி பெறுவார் என ஒரு ஜோதிடர் கணித்துள்ளதாக இன்று நடிகர் எஸ்.வி சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News June 2, 2024

கந்து வட்டி கொடுமை-விசாரணை வளையத்தில் 35 பேர்

image

சிவகாசி பாலாஜி நகரில் கடந்த 23ம் தேதி ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. முதல் கட்டமாக 6 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் 35 பேரிடம் தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்களில் சிலர் ஒரு சில நாட்களில் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

News June 2, 2024

விருதுநகர்:பாட நூல்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்

image

விருதுநகர் மாவட்டத்தில் அரசு அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.26 லட்சம் மாணவ மாணவியருக்கு வழங்குவதற்காக இலவச பாடநூல்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விருதுநகர் மற்றும் சிவகாசி என இரு கல்வி மாவட்டங்களில் 1613 பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் 1613 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி அன்று அனைத்து பாடநூல்களும் வழங்கப்பட உள்ளன.

News June 1, 2024

விருதுநகர் இனிப்பான கருப்பட்டி மிட்டாய் சிறப்பு!

image

விருதுநகர் மாவட்டத்தின் மிகவும் பிரபலமான தின்பண்டமாக இருப்பது கருப்பட்டி மிட்டாய் ஆகும். தேன்குழல் மிட்டாய், கருப்பட்டி மிட்டாய், ஏணி மிட்டாய் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த மிட்டாய், பார்க்க ஜிலேபி போல் இருந்தாலும், கருப்பட்டியில் செய்வதால் இதன் சுவை தனித்துவமானதாக உள்ளது. இந்த மிட்டாய் தென்மாவட்டங்களிலும் கிடைக்கின்றன. விருதுநகரின் தனித்துவ சுவையாகவும் உள்ளது இந்த கருப்பட்டி மிட்டாய்.

News June 1, 2024

சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு காமராஜர் விருது

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023 2024 ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசு தொகையினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பு.

News June 1, 2024

விருதுநகர் போலீஸ் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் கந்து வட்டிக்கு விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகாசியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் கந்து வட்டி கொடுமையால் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கந்துவட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை எடுத்துள்ளார்.

error: Content is protected !!