India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக அக்கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று (02.04.2024) மாலை விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சித்துராஜபுரம், சிவகாசி, திருத்தங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராதிகா சரத்குமார் ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அருப்புக்கோட்டை அருகே மலை பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (32). பஞ்சாலை தொழிலாளியான முத்துராஜ் மல்லம்பட்டி கண்மாய் அருகே அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இந்த வழக்கில் விசாரணை செய்த தாலுகா போலீசார் முத்துராஜை கொலை செய்ததாக
17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை நேற்று மார்ச் 31 கைது செய்தனர். ஓரினச்சேர்க்கைக்கு முத்துராஜ் இணங்கவில்லை என்பதால் அவர்கள் முத்துராஜை கொலை செய்தது தெரியவந்தது.
அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் நேற்று மார்ச் 31 காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே 41வது பொருட்காட்சி நடைபெற அரசு தடை விதித்திருப்பது தெரிந்தும் அரசு உத்தரவை மீறி பொருட்காட்சி நடைபெற உள்ளது என சிலர் போஸ்டர் ஒட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே பீடர் சாலையில் ராமநாதபுரம் மாவட்ட சர்வோதய சங்க கட்டிடத்தில் இலவம் பஞ்சு மெத்தை, பர்னிச்சர் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சர்வோதய சங்கங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், இன்று இங்குள்ள இலவம் பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
ஏழாயிரம்பண்ணை பகுதியை சேர்ந்த அஜித்குமார் 25, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.சிறுமியை திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.பின்னர், சிறுமியை சாதியை காரணம் காட்டி செய்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.சிறுமி அளித்த புகாரின் பேரில் இளைஞர் மீது இன்று போக்ஸோ வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சமூகநலத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சிறுமியின் வீட்டிற்கு சென்று நடத்திய விசாரணையில் கோபி என்பவர் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளது தெரியவந்தது. குழந்தை திருமணம் செய்த கோபி என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே அனுப்பன்குளத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் 33. இவர் தனது ட்ராக்டரை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்து இருந்த நிலையில் அருகில் வசிக்கும் மாரியப்பன் தன் வீட்டிற்கு செல்ல டிராக்டர் இடையூறாக இருப்பதாக அதை அகற்ற கூறியுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் மாரியப்பன் சிவபெருமாளின் காதை கடித்துள்ளார். காயமடைந்த சிவபெருமான் அளித்த புகாரில் மாரியப்பன் மீது வழக்குபதிவு.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கட்சி வாய்ப்பு அளிக்காததால் பாஜகவின் மதுரை மேற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட செயற்குழு உறுப்பினரான வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் நடைவண்டி சின்னம் ஒதுக்கீடு செய்தார்.
அம்மாபட்டி வடக்கு தெருவை சேர்ந்த பாலமுருகன்- பாப்புக்குட்டி தம்பதியினர். இவர்களது 2வது மகள் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.இதை தாய் கண்டித்ததால் மன உளைச்சலில் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதை கண்ட தாய் பாப்புக்குட்டியும் அவருக்கு அருகிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகரில் நாளை வாக்காளர் விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி மருத்துவக் கல்லூரியில் துவங்கி நடைபெற உள்ளது. கல்லூரி மாணவ மாணவியருக்கு தனித்தனியாக நடைபெற உள்ள இந்த மாரத்தான் காலை 6.30 மணியளவில் துவங்க உள்ளது. இதில் மாணவர்களுக்கு 10 கி.மீ தூரமும் மாணவியருக்கு 8 கி.மீ தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகையும் வழங்க உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.