India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 13வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 17850 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 18606 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 9814 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3826 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 13 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 244 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
விருதுநகர் எம்பி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி முகத்தில் உள்ளார். 2வது இடத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், 3வது இடத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமாரும் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராதிகா, விஜய பிரபாகரன் எனக்கு மகன் போன்றவர் என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 12 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 18847 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 18210 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 8578 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3544 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 12வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 1200 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
விருதுநகரில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இழுபறி அடைந்து, வெற்றி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தேமுதிக நிர்வாகிகள் விஜய பிரபாகரன் வெற்றி அடைந்ததாக திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். ஆனால் அவர் தற்போது 3, 843 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 10வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 18,350 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 20,571 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 10022 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3535 வாக்குகளும் பெற்றுள்ளனர். 10வது சுற்றின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 194 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 9 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 174091 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 172064 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 67051 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக் – 33925 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 9 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2027 வாக்குகள் பெற்று முன்னிலை.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 8 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 151830 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 151039 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 58285 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 29959 வாக்குகளும் பெற்றுள்ளனர். 8 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 792 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
விருதுநகர் தொகுதியில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேமுதிக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேமுதிகவின் விஜய பிரபாகரனைவிட, காங்கிரசின் மாணிக்கம் தாகூர் 203 வாக்குகள் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது 1078 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதனால், விருதுநகர் தொகுதியில் தேமுதிக- காங்கிரஸ் மாறிமாறி முன்னிலை வகிக்கிறது.
விருதுநகர் தொகுதியில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேமுதிக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேமுதிகவின் விஜய பிரபாகரனைவிட, காங்கிரசின் மாணிக்கம் தாகூர் 203 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதனால், விருதுநகர் தொகுதியில் தேமுதிக- காங்கிரஸ் மாறிமாறி முன்னிலை வகிக்கிறது.
விருதுநகர் தொகுதியில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேமுதிக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேமுதிகவின் விஜய பிரபாகரன், காங்கிரசின் மாணிக்கம் தாகூரை விட 32 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.