India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மாசி மாத பிரதோஷம் மற்றும் அம்மாவாசை முன்னிட்டு இன்று ஏப்ரல் 6 முதல் 9ஆம் தேதி வரை வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதையடுத்து இன்று பிரதோஷத்தை முன்னிட்டு காலை முதலே திரளான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் மலைக் கோயிலில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 314 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், ஒரு வாக்குச்சாவடி கூட மிகவும் பதற்றமானது இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 1680 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1680 வாக்குச்சாவடிகளில் 186 வாக்குச்சாவடிகள் பிரச்சனைகளுக்கு உரியவை, 2 வாக்குச்சாவடிகள் பதற்றம் ஆனவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை ஏப்.6 ஆம் தேதி முதல் ஏப்.9 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் மலை கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட நாளில் மழை பெய்தால் மலையேற செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு, தாணிப்பாறை விலக்கு அருகே போலீசார்வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த வத்திராயிருப்பை சேர்ந்த பொன்ராஜ்(42) என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுமார் 11 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் பொன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (20). தேநீர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை கோனேரி குளத்தில் குளிக்கும்போது, வழுக்கி விழுந்ததில் அடிபட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள நான்கு தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் 150-க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடன் “காப்பு வித் கலெக்டர்” என்ற 65-ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கினார்.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் (ம) சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விரு கோவில்களிலும் வரும் 8, 9ம் நாள் விழாவாக கயிறு குத்துதல், அக்கினி சட்டி எடுத்தல் உள்ளிட்ட வேண்டுதலை நிறைவேற்றும் முக்கிய விழாவாக நடைபெறும். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் 8ம்தேதி விடுமுறை விடப்படடுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதில்,பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.