India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விருதுநகர் தொகுதியில் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். வெற்றிக் குறிவைத்து சொந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் களம் கண்ட விஜய பிரபாகரனும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் தோல்வியைத் தழுவினர். மாணிக்கம் தாகூர் இதே தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 2 முறையும், அதிமுக 1 முறையும் வென்றுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக www.cara.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் வரும் 21ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல்:
*காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் – 3,82,876 வாக்குகள்
*தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் – 3,78,243 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் – 1,64,149 வாக்குகள்
*நாதக வேட்பாளர் சி.கௌசிக் – 76,122 வாக்குகள்
திருச்சுழி அருகே புதையனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (31). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. கட்டனூர் போலீசார் நேற்று இருதரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மக்களைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். விஜயகாந்தின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்ட தொகுதியில், அவர் தோல்வி அடைந்திருப்பது கட்சியினர், ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் சறுக்கியது எங்கே? மக்களே உங்கள் கருத்தை கமென்ட் செய்யவும்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,82,876 மேல் வாக்கு பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 3,78,243 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். 4,628 வாக்குகளில் காங், முன்னிலையில் உள்ள நிலையில் இன்னும் 4,480 வாக்குகள் மட்டுமே எண்ண வேண்டியுள்ளது.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 24வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 547 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 682 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 219 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 152 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 23வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4633 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 21வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 7986 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 8691 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 3040 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 1860 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 21வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4843 வாக்குகள் பெற்று முன்னிலை.
Sorry, no posts matched your criteria.