India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக மாலை நேரத்தில் பெய்த மிதமான மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகாசி பகுதியில் உள்ள பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் அச்சகங்கள் போன்றவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. சிவகாசி அணில் குமார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலாளர் பட்டாசு உற்பத்தி தொழில் கடந்த சில நாட்களாக கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அதிகாரிகளின் தொடர் ஆய்வுகளில் விதிமீறிய ஆலைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்படுவது, தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி சரிபாதியாக குறைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் வரும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 15,764 ஓட்டு வித்தியாசத்தில் தேமுதிகவை வென்றார். இதேபோல் 2019 ஆம் ஆண்டு 1,54,554 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளரை வென்றார். இந்த நிலையில் இந்த ஆண்டு 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை வென்றார். இதன் மூலம் 2009,2019,2024 என மூன்று முறை காங்கிரஸிடம் தேமுதிக தோற்றுள்ளது.
விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் கோபால் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால் 3500 க்கும் அதிகமான பணியிடங்கள் ஒழிக்கப்படும், சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்கத்தை பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 12 புகார் மனுக்களும் காவலர்களிடமிருந்து 16 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.மேலும் இந்த கூட்டத்தில் காவல் உயர் அதிகாரிகள், குழந்தைகள் நல அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் சற்று முன் குற்றம்சாட்டியிருந்தார்.இந்நிலையில் அவரது குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள எம்.பி.மாணிக்கம் தாகூர் பிரேமலதா பொய் குற்றச்சாட்டை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத எனவும் பொய், புரட்டை முன்வைத்து பரப்புரை செய்த பிரேமலதா இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே மீனம்பட்டி திடீர் நகரை சேர்ந்த ஜெய்சந்திரன் மனைவி ஞானபிரகாசி 48, மகள் சர்மிளா 24 இருவரும் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கந்துவட்டி கும்பல் பணம் கேட்டு மிரட்டியதுடன் அவதூறாக பேசி மன உளைச்சலை ஏற்படுத்தியது தெரியவந்தது. தற்கொலைக்கு முன் ஷர்மிளா எழுதிய கடிதத்தை கைப்பற்றி கந்துவட்டி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கெப்பிலிங்கம்பட்டியில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் ரயில்வே கீழ் பாலம் அமைந்துள்ளது. இவ்வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விருதுநகருக்கு தினசரி வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது பெய்த மழையினால் பாலத்தின் கீழ் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.