India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சுழி அருகே மறவர் பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அழகன் (50). கூலி வேலை செய்து வந்த அழகன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அழகன் திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அழகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். ம.ரெட்டியபட்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
விருதுநகர் வேலுச்சாமி நகர் கச்சேரி ரோட்டை சேர்ந்தவர் அங்குசாமி(38). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் வாசல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் சார்ந்த உற்பத்தியை ஊக்குவிக்க பிரதான் மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாவட்ட வள நபர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் தற்பொழுது அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் 20 ஆம் தேதிக்குள் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 71,384 பேர் எழுத 291 மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 291 முதன்மை கண்காணிப்பாளர்கள், துணை தாசில்தார் நிலையில் 53 நடமாடும் குழுக்கள், துணை ஆட்சியர் நிலையில் 10 பறக்கும் படைகள், 291 தேர்வு மையங்களுக்கு வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகின்ற 21ம் தேதி மாலை 3 மணி அளவில் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து புகார் மனுக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகின்ற 15-ம் தேதி ஆகும். பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா இன்று தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே திருத்தங்கல்லை சேர்ந்த தீபலட்சுமி, லட்சுமி உள்ளிட்ட 3 பெண் பட்டாசு தொழிலாளிகள் அதே பகுதியில் வசிக்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஈஸ்வர பாண்டியிடம் வட்டி கடன் பெற்றனர். பணம் செலுத்த தாமதமானதால் அவர்களது வீட்டிற்கு சென்ற ஈஸ்வர பாண்டியன் கடன் பெற்ற பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரில் கந்துவட்டி கொடுமை செய்ததாக நேற்று போலீசார் அவரை கைது செய்தனர்.
சிவகாசி அருகே மீனம்பட்டியில் பட்டாசு தொழில் முடங்கி வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் கடன்காரர்கள் மற்றும் குழுதாரர்கள் யாரும் வரும் ஜூலை 5ம் தேதி வரை கடன் வசூலிக்க வேண்டாம் என ஊர் சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே கிராமத்தில் 2 நாட்களுக்கு முன் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் இவ்வாறு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவர் அருகில் வசிக்கும் மற்றொரு சமுதாயத்தை பற்றி இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் நேற்று இரவு கருப்பசாமியை தலை, கைகளில் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.