India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒண்டிபுலிநாயக்கனூர் ஊராட்சியில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஒப்பந்ததாரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பல்வேறு அறிவுறுத்தலை வழங்கினார்.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபாக்கியம் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று ஜெயபாக்கியம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வத்திரப் அருகே எஸ்.கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.இவரது மகன் ஜெகதீஸ் என்பவர் அத்திகோயில் பகுதியில் உள்ள தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து பார்த்து வருகிறார். கான்சாபுரம் -அத்திகோயில் சாலையில் பைக்கில் ஜெகதீஸ் சென்றபோது எதிரே வந்த வனராஜ் என்பவர் மோதியதில் பலத்த காயமடைந்து இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூமாபட்டி
போலீசார் நேற்று இரவு வனராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விருதுநகரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வருகின்ற 16ஆம் தேதி அன்று மாலை 4 மணி அளவில் உலக அமைதிக்காக கூட்டுத் தியானம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர் என அனைத்து தாலுகாக்களில் இருந்தும் கலந்து கொள்கின்றனர் என பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சிஸ்டர் செல்வி தெரிவித்துள்ளார்.
விருதுநகர், துலுக்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவுகள், அதன் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரங்களில் உள்ள சிறிய ரக பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடந்த சில தினங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், தொழிலாளர் நலன் மற்றும் குழந்தைகளின் கல்வி நலன்களை கருத்தில் கொண்டு இன்று முதல் (11.06.24) அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பணியினை துவக்க டாப்மா சங்க உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வரும் 18ம் தேதி அன்று முற்பகல் 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பயன்பட வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு கல்லூரிகள் இன்று திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள் புதிய பேருந்து அட்டை வழங்கும் வரை அவர்கள் கடந்த ஆண்டு பயன்படுத்திய அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என விருதுநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (50). இவருக்கும் இவரது உறவினர் சீனிவாசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று முன் விரோதம் காரணமாக இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு வெங்கடேஷ் ஆணுறுப்பை சீனிவாசன் கடித்துக் குதறியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வெங்கடேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சீனிவாசனை தாலுகா போலீசார் கைது செய்தனர்.
மதுரை தங்கம் நகரை சேர்ந்தவர் பிரசன்னா(42). நகை கடையில் வேலை செய்து வரும் பிரசன்னா தனது மனைவியுடன் காரில் பெருநாழி சென்று விட்டு மீண்டும் இன்று ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி அருகே குல்லம்பட்டி பகுதியில் கார் திடீரென நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற பிரசன்னா சம்பவ இடத்திலேயே பலியானார். ம.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.