Virudunagar

News October 8, 2024

விருதுநகர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

image

அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (அக்.8) நடைபெற்றது.14 புதிய முதலீட்டு திட்டங்களுக்காக ரூ.38,698 கோடி முதலீட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தின் மூலம் தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்ட இளைஞர்கள் 46,931 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

News October 8, 2024

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (54). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் சாட்சியாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 8, 2024

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது

image

சிவகாசி வெம்பக்கோட்டை சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த சரஸ்வதி பாளையத்தை சேர்ந்த ராஜபாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் நதிக்குடியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த சூரிய பிரகாஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவருக்கும் கஞ்சா சப்ளை செய்யும் நபர்களை தேடி வருகின்றனர்.

News October 7, 2024

புத்தகத் திருவிழா மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

image

விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 ஆவது புத்தக திருவிழா நடைபெற்றது வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பார்வையிட்டு தேவையான நூல்களை வாங்கிச் செல்கின்றனர். புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவடைய உள்ளதை தொடர்ந்து அதனை மேலும் நீண்டிக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மேலும் 3 நாட்கள் அதாவது அக்.10 வரை புத்தக திருவிழா நீட்டிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

புத்தகத் திருவிழா இன்று கடைசி நாள்

image

விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 ஆவது புத்தக திருவிழா நடைபெற்றது வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பார்வையிட்டு தேவையான நூல்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் 3 ஆவது புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.

News October 7, 2024

5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

வங்ககடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது தெற்கு ஆந்திரா – வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு – தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று(அக்.7) முதல் அக்.11 வரை விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT

News October 6, 2024

புத்தகத் திருவிழாவில் நூலை வெளியிட்ட நடிகர் சிவக்குமார்

image

மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் 3வது புத்தகத் திருவிழாவின் மைய நோக்கம் “மரமும் மரபும்” சுற்றுச்சூழலையும், நமது பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தல் தொடர்பாக பெறப்பட்ட 81 படைப்புகளில் தேர்வுக்குழுவினால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த 32 படைப்புகளை தொகுத்து, சிறுகதை தொகுப்பு மரமும், மரபும் என்ற பெயரில் நூலாக ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்.

News October 5, 2024

முகமூடி கொள்ளையனிடமிருந்து 47 பவுன் நகைகள் மீட்பு

image

தென்மாவட்டங்களில் ரயில்வே ட்ராக்கை ஒட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு மங்கி குல்லா,பாறையைப் பிளக்கும் இரும்பு ராடு போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி கொத்தனார் மூர்த்தி டீம் நகை, பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.இக்கும்பலின் தலைவன் மூர்த்தியை சமீப நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரித்த போலீசார் ஸ்ரீவியில் கொள்ளையடித்த 47 பவுன் நகைகளை மீட்டு மீண்டும் சிறையில் அடைத்தனர்.

News October 5, 2024

பட்டம் புதூர்: பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

image

புராட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு விருதுநகர் அடுத்த பட்டம் புதூர் கிராமத்தில் உள்ள வீரராக பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்து சென்றனர். மேலும் கிராமத்தினர் சார்பாக 2000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

News October 5, 2024

சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்

image

விருதுநகர் அருகே அக்ரஹாரப்பட்டி பாலம் அருகில் உள்ள தனியார் பட்டாசு கடை பின்புறம் நேற்று வச்சகாரப்பட்டி காவல் துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக பட்டாசுகள் பேக்கிங் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பட்டாசுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஜெயராஜ்(53) என்பவர் கைது செய்தனர்.