India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் இன்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இளம் தலைமுறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் யாரிடமும் பணம் & பரிசு பெறாமல் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பேசி விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் 7,29,438 ஆண் வாக்காளர்களும், 7,64,760 பெண் வாக்காளர்களும், 3ம் பாலினத்தவர்கள் 202 பேர் என மொத்தம் 14,94,400 வாக்காளர்கள் வரும் 19 ம் தேதி வாக்களிக்க தயாராக உள்ளனர்.1,680 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக 186 வாக்குச்சாவடிகளும், 2 பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு அளித்தார்.
விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்து வந்த நிலையில், விஜய பிரபாகரன் பேசுகையில், எங்க அப்பாவுடைய ஆசையையும், கனவையும், நிறைவேற்றுவதற்கு ஒரு வழி எனக்கு கிடைத்திருக்கிறது.
கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றிபெற்று எங்க அப்பாவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் கூறினார்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மேற்கு காவல் நிலைய போலீசார் நேற்று மாலை ரவுண்டு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் பாக்கியராஜ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து லாட்டரி சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் பாக்யராஜ் என்பவரை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான உரிமம் தளங்கள் மகாவீரர் ஜெயந்தி தினமான வருகின்ற 21ஆம் தேதி மற்றும் மே தினமான மே 1 ஆகிய இரு தினங்களில் தற்காலிகமாக மூட உள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் மதுபான கடைகளின் உரிமைதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரித்துள்ளார்.
தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 17.04.2024 முதல் 20.04.2024 வரையிலும் மற்றும் 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டுள்ளார். இதனை
மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 17.04.2024 முதல் 20.04.2024 வரையிலும் மற்றும் 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டுள்ளார். இதனை
மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பட்டாசு கடைகளை நாளை முதல் ஏப்ரல்.20 ஆம் தேதி வரை, ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்கள் இயங்க தடை மேலும் மீறி பட்டாசு கடைகள் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு ஏப்ரல் 19 அன்று பிறந்த நாளாக கொண்ட முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களுடன் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் உள்ள மாவட்ட இலச்சினை வரையப்பட்ட கேக்கினை வெட்டி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் வாக்காளர்கள் பிறந்தநாள் கொண்டாடினார்கள்.
சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சந்தோஷ் என்பவர் ஓட்டிவந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் ரூ.8,70,000/- ஆவணம் இன்றி பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செயது வட்டாட்சியரிடம் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.