Virudunagar

News April 19, 2024

விருதுநகர்: ஜனநாயக கடமையாற்றிய கலெக்டர்

image

விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட
ஆட்சித்தலைவருமான வீ.ப.ஜெயசீலன் விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூரைக்குண்டு அரசு தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இன்று(19.04.2024) தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

News April 18, 2024

விருதுநகர் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

விருதுநகர் மக்களே நாளை இதை செய்யுங்கள்

image

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவின் போது ஏதேனும் குறைகளோ அல்லது புகார் இருந்தால், அது குறித்து 1800 425 2166 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும், 04562- 252100, 221301, 221302, 221303, மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 1950, 0452-234600, என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

News April 18, 2024

விருதுநகர்: நாளை பேருந்தில் இலவச பயணம்

image

மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

விருதுநகர்: மின்சாரம் தாக்கி பலியான சோகம்!

image

தாயில்பட்டி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் முருகராஜ் (38).இவருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் மடத்துப்பட்டியில் இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் மோட்டார் ஸ்விட்ச் ஆன் செய்த போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 18, 2024

விருதுநகர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

image

விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில்
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று ஏப்ரல் 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

News April 18, 2024

விருதுநகர் தொகுதி: இது உங்களுக்கு தெரியுமா!!

image

2019 மக்களவைத் தேர்தலில், விருநகர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று எம்.பியானார். இவர், மொத்தம் 4,70,883 (43.8%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான உமையொருபாகம் 789 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!

News April 18, 2024

ஆண்டாள் கோயிலில் ராமநவமி பூஜை

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாடக சாலை தெரு திருவேங்கடமுடையான் சன்னதியில்  ராமர், சீதை, லட்சுமணன் எழுந்தருளினர். அங்கு ராமநவமி வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

News April 18, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகள்

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமானவை என 188 வாக்குச்சாவடிகள் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 148 தேர்தல் நுண் பார்வையாளர்களும் கூடுதலாக 26 தேர்தல் நுண் பார்வையாளர்களும் என மொத்தம் 174 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகள்

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமானவை என 188 வாக்குச்சாவடிகள் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளன இந்நிலையில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 148 தேர்தல் நுண் பார்வையாளர்களும் கூடுதலாக 26 தேர்தல் நுண் பார்வையாளர்களும் என மொத்தம் 174 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!