Virudunagar

News June 17, 2024

விருதுநகரில் டீ குடிக்க சென்ற நபர் மாயம்

image

விருதுநகர் காந்திபுரம் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது சகோதரர் சுந்தரம் என்பவரது பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 2 காலை 8 மணி அளவில் டீ குடிக்க செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் தற்போது வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் பாலமுருகன் எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் அவரது சகோதரர் சுந்தரம் இன்று மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News June 17, 2024

விருதுநகர் அருகே நாளை மின்தடை

image

விருதுநகர் அருகே அல்லம்பட்டி ஆர்.எஸ்.நகர், பாலவனத்தம், மெட்டுகுண்டு, கடம்பன்குளம், செந்நெல் குடி அரச குடும்பம்பட்டி பொட்டல்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின் வாரியம் சார்பாக வாராந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 17, 2024

வத்திராயிருப்பு: 3 பேர் கைது

image

வத்திராயிருப்பு பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, நேற்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வத்திராயிருப்பு மின்வாரிய அலுவலகம் அருகே வந்த ஆட்டோ மற்றும் பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது, புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓசூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி உள்ளிட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த புகையிலைகளை பறிமுதல் செய்தனர்.

News June 17, 2024

சிவகாசி: மின் வாரியம் முக்கிய அறிவிப்பு!

image

சிவகாசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 18.06.2024 அன்று செவ்வாய்க் கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே நுகர்வோர்கள் மின்வாரிய பணிகள் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து, தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

News June 16, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞர் கொலை

image

சிவகாசி: எரிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்(28).இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த ஓராண்டுக்கு மேலாக தனியாக வாழ்ந்து வரும் நிலையில்,ஸ்ரீவி அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் கறிக்கடை அமைத்துள்ளர்.இன்று காலை கிருஷ்ணன் கோயில் தனியார் பார் அருகே உடலில் வெட்டு காயங்களுடன் பிரசாந்த் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிகின்றனர்.

News June 16, 2024

விருதுநகரில் பெண் போலீசுக்கு ஓராண்டு சிறை

image

சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் போலீசாக தீபா பணிபுரிகிறார். விருதுநகர் சூலக்கரை பகுதியில் வசித்து வரும் இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த ஞானமணி என்பவரது குடும்பத்திற்கும் குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின் போது காவலர் தீபா ஞான மணியை மட்டையால் தாக்கியதில் அவர் காயமடைந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கலை நிலா, காவலர் தீபாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தார்.

News June 16, 2024

விருதுநகரில் உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக நேற்று உயர்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

News June 16, 2024

3 ஆண்டுகளாக முடங்கிய ஆவின் பாலகம்

image

சிவகாசி மாநகராட்சி பகுதிகளான திருத்தங்கல் பேருந்து நிலையம், எம்எல்ஏ அலுவலகம், பழைய விருதுநகர் சாலை, மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிதாக ஆவின் பாலகம் அமைக்கப்பட்டது. இந்த ஆவின் பாலகம் ஒரு நாள் கூட செயல்படாமல் தற்போது வரை பூட்டியே கிடப்பதாக கூறும் பொதுமக்கள் இதனால் ஆவின் நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் எந்த பயனும் இல்லை என புலம்புகின்றனர் .

News June 16, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

image

திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து அ.கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் காத்தமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

News June 15, 2024

பொதுமக்களுக்கு போலீசார் ஏற்படுத்திய விழிப்புணர்வு

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் படியும், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல்கண்காணிப்பாளர் அசோகன் ஆலோசனையின் படியும், ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் சார்பில் ஜூன் 15ஆம் தேதி சைபர் குற்றங்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன் , துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்கள் மத்தியில் போலீசார் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!