Virudunagar

News April 24, 2024

விருதுநகரில் டாஸ்மாக் மூடல்!

image

மே 1ஆம் தேதி உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உரைத்த நாள், தொழிலாளர் தினம், பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள், எட்டு மணி நேர வேலை என்று அறிவிக்கப்பட காரணமாக இருந்த நாளில் மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் மதுபானக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டார்.

News April 24, 2024

விருதுநகர் லோக்சபா தேர்தலில் 3,278 புகார்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஓட்டுப்பதிவு நாள் வரை மட்டும் சி விஜில் செயலி, ஆன்லைன், தொலைபேசி ஆகியவை வாயிலாக 3,278 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதி பெற்ற புகார்களாக எடுக்கப்பட்ட 3059 புகார்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது.

News April 24, 2024

விருதுநகர்:தேர்தல் நாளில் 117 அலுவலர்கள் ஆப்செண்ட்

image

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அலுவலர்கள் ஆப்சென்ட் ஆகினர் . விருதுநகர் மாவட்டத்தில் 9243 அலுவலர்கள் தேர்தல் பணிக்கு ஓட்டு சாவடி தலைமை அலுவலர் 1, அலுவலர் 2, 3 என்ற பணி நிலைகளில் நியமிக்கப்பட்டனர். 7206 பணியிடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் கூடுதலாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் 117 அலுவலர்கள் வரை பல்வேறு நிலைகளில் ஆப்சென்ட் ஆகினர்.

News April 24, 2024

விருதுநகர்: மின்சாரம் தாக்கி மாணவர் பலி

image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும் போது, ட்ரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் தாக்கி கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் கல்யாண குமார் (19) இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து ஸ்ரீவிருதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 24, 2024

விருதுநகர்: தீயில் எரிந்த நபர்

image

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளி சுனில் குமார்(22). இவர் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது குப்பைகளை எரிப்பதற்காக டீசலை பயன்படுத்தும் பொழுது எதிர்பாராத விதமாக டீசல் கேன் வெடித்ததில் சுனில் குமார் மீது தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 24, 2024

விருதுநகர்: 49 மது பாட்டில்கள் பறிமுதல்

image

விருதுநகர் சிவகாசி சாலையில் இன்று ஆமத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது, தனியார் உணவகம் அருகே அனுமதி இன்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக குமாரலிங்கபுரம் பகுதியைச் சார்ந்த சந்திரன் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 24, 2024

விருதுநகர் அருகே சுகாதார சீர்கேடு

image

ஏழாயிரம்பண்ணை பாண்டியாபுரம் செல்லும் சாலையில் குடியிருப்பு அருகே குப்பைகளை கொட்ட ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு அப்பகுதியினர் குப்பைகளை கொட்டுகின்றனர்.ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குப்பைகளை அள்ளப்படாமல் சுகாதாரக்கேடு ஏற்பட்டு துர்நாற்றமும் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

News April 24, 2024

வத்ராப்: மனைவி தம்பியை குத்திய கணவர் 

image

வத்திராயிருப்பு அருகே மேல கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசுப்பிரமணியன்.
இவரது அக்காவை ஜெயராம் என்பவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளனர். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்,ஜெயராம் தனது மனைவியை சேர்த்து வைக்க கோரி ஞானசுப்ரமணியனிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார். வத்திராயிருப்பு போலீசா நேற்று வழக்குப் பதிந்து விசாரணை.

News April 22, 2024

விருதுநகர் அருகே விபத்து; மரணம் 

image

அருப்புக்கோட்டை ஜெயராம் நகரை சேர்ந்தவர் நாகசுந்தரேஸ்வரன் (18).காந்தி நகரில் உள்ள தனியார் டிசைனர் கம்பெனியில் வேலை செய்து வந்த நாகசுந்தரேஸ்வரன் கம்பெனியிலிருந்து நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.திடீரென நாய் குறுக்கே வந்ததால் பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து நாகசுந்தரேஸ்வரன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.தாலுகா போலீசார் நேற்று ஏப்ரல் 21 வழக்கு பதிந்துள்ளனர்.

News April 22, 2024

தடபுடலாக தயாராகும் சித்திரை திருவிழா பொருட்காட்சி!

image

சிவகாசியில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வரும் 30ஆம் தேதி துவங்க உள்ளது. இதையொட்டி வரும் 26ம் தேதி முதல் சித்திரை திருவிழா பொருட்காட்சி துவங்க உள்ளது. விளாம்பட்டி சாலையில் நடைபெறவுள்ள பொருட்காட்சிக்கான ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியில் பொதுமக்களை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக மெகா வடிவ ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற உள்ளது.

error: Content is protected !!