India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாணிக்கம் தாக்கூர், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு 3வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வீர விருது பெற்றவர்கள், போரில் உயிர் தியாகம் செய்தவர்களை சார்ந்தவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் வருகின்ற ஜூன் 27ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஆந்திராவில் இருந்து மண்ணுளிப் பாம்பை கொண்டு வந்து தனது வீட்டில் வைத்து வளர்த்து வந்துள்ளார். அந்த மண்ணுளிப் பாம்பை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்த மதுரை தனிப்படை போலீசார் விருதுநகர் வந்து சுரேஷை கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த ஞானசேகர், அர்ச்சுனன், கடற்கரை, ரவி, சேகர் ஆகியோரையும் கைது செய்து வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேலும் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மாற்றத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குறைகளைக் கேட்டு அறிந்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் பிரதம மந்திரி ஜீவன் ஜோதிபீமா யோஜனா காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சம் இழப்பீடு தொகை காசோலைகளை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழுவின் சிறுதானிய உணவகத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் விருதுநகர் பகுதியைச் சார்ந்த ஏராளமான மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்,வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் 30.7 மி.மீ உயரமும் 25.6 மி.மீ அகலம் கொண்ட சுடுமண்ணால் ஆன பெண்ணின் தலைப்பகுதி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறையை வெளிப்படுத்தும் விதமாக அகழாய்வில் மேலும் பல பொருட்கள் கிடைக்கும் என்பதே தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
கண் தானம் வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இதுவரை 4500-க்கும் மேற்பட்டோரிடம் கண்தானம் பெற்று சுமார் 16 ஆயிரம் பேருக்கு பார்வை கிடைக்கச் செய்த சிவகாசியை சேர்ந்த கண்தானம் கணேசன் சமூக சேவைக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இந்நிலையில் இவரது சேவையை பாராட்டி சென்னையில் நேற்று நடிகர் பாக்கியராஜ் தன்னலமற்ற அர்ப்பணிப்பிற்கான அகரம் 2024 விருது வழங்கி கண்தானம் கணேசனை பாராட்டினார்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் மரணம் தொடர்பாக மாநில அரசை கண்டித்து விருதுநகரில் நாளை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ் குமார் தாக்கல் செய்த அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனு நாளை முதல் வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.
குரூப் 1 தேர்வுக்கு விருதுநகரில் 4 நாட்கள் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் நாளையும்(ஜூன் 23) அதை தொடர்ந்து ஜூன் 27 மற்றும் ஜூலை 3 , 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளோர் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.