Virudunagar

News June 28, 2024

துணை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

விருதுநகர் மாவட்டத்தில் துணை ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் பணியாற்றும் போத்தி, சாத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் அழகர்சாமி, கட்டணூரில் பணியாற்றும் வேல்முருகன், வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் காசிராஜன் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News June 28, 2024

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த எம்எல்ஏ

image

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மானியக்கோரிக்கை கூட்டம் நடைபெறும் முன்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவுவை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் நேற்று(ஜூன் 27) நேரில் சந்தித்தார். உடன் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 27, 2024

காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

விருதுநகர் உட்பட 8 மாவட்டங்களில் இன்று(ஜூன் 27) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.

News June 27, 2024

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 16 புகார் மனுக்களும் காவலர்களிடமிருந்து 54 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News June 26, 2024

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 16 புகார் மனுக்களும் காவலர்களிடமிருந்து 54 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News June 26, 2024

விருதுநகர் மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் இன்று மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024 2025-ம் நிதி ஆண்டிற்கான ரூ.30896.43 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் வெளியிட்டார்.

News June 26, 2024

விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன்படி இன்று இரவு 7 மணி வரை விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

News June 25, 2024

விருதுநகர்: ”காப்பி வித் கலெக்டர் நிகழ்ச்சி”

image

விருதுநகர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று அரசு பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இருந்து சிறந்து விளங்கக்கூடிய 30 பள்ளி மாணவர்களுடனான ”காப்பி வித் கலெக்டர் என்ற 73வது கலந்துரையாடல் நிகழ்ச்சி” மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

News June 25, 2024

விருதுநகர்: ஓட்டுநர் உதவியாளருக்கு பரிசு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு 108 இலவச அவசர சிகிச்சை உறுதியில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு பரிசு மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பாபுஜி 108 ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News June 25, 2024

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!