India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலுக்கு வேட்புமனு 20.03.2024 முதல் 27.03.2024 வரை 23.03. 2024 சனிக்கிழமை மற்றும் 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்கள் தவிர்த்து தாக்கல் செய்யலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடத்திடும் பொருட்டு சமூக வலைதளங்கள் மூலமாக உண்மைக்கு புறமாக செய்தி வெளியிடுபவர்கள் மீது சைபர் கிரைம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று(மார்ச்.19) தெரிவித்துள்ளார். மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
விருதுநகர் அருகே மீசலூர் பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி (54). இவர் ஆடு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு விருதுநகர் சிவகாசி சாலையை கடக்க முயன்ற பொழுது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் மாரிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி அன்னலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.
நாடாளுமன்ற தேர்தல் 2024 அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 8ம் தேதி வரை விருதுநகர் மாவட்ட தலைநகர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகள், குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்ட செய்தி குறிப்பில், சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்படும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருக்கன்குடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். சிவகாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் இவர் தனது மனைவி மகேஸ்வரியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மகேஸ்வரி நேற்று அதிக மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து மகேஸ்வரி புகாரில் ஆசிரியர் முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி, புதூரை சேர்ந்தவர் நாகவள்ளி(47). நாகவள்ளி தனது மகனுடன் பைக்கில் குலதெய்வம் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தொட்டியாங்குளம் விஷ்வாஸ் பள்ளி அருகே அவ்வழியாக வந்த மற்றொரு பைக் மோதி நாகவள்ளி & அவரது மகன் இருவரும் படுகாயம் அடைந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் மீது திருச்சுழி போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றார்.
Sorry, no posts matched your criteria.