Virudunagar

News March 22, 2024

விருதுநகர்: சாலையை சீரமைக்க கோரி சாலை மறியல்!

image

சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட விவேகானந்தர் காலனியில் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாதங்களாக சாலை சேதமடைந்த நிலையில் உள்ளதால் விபத்து ஏற்பட்டு வருவதால் சாலையை சீரமைக்க கோரி ஏற்கனவே மனு அளித்தும் சாலை சீரமைக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று மாலை செங்கமலநாச்சியார்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

News March 21, 2024

விருதுநகர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அதனை ஒப்படைத்து அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். இது போன்ற நேரங்களில் துப்பாக்கியை பயன்படுத்த அனுமதி கிடையாது என்பதால் காலம் தாழ்த்தாமல் துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 21, 2024

விருதுநகர் அருகே தந்தையை கொன்ற மகன் 

image

காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் நடுகாடான் (65).அவரது மகன் மணிகண்டன் (35) நேற்று(மார்ச்.20) இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மகன் மணிகண்டன் அவரது தந்தை நடுக்கடானை கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

News March 21, 2024

விருதுநகரில் தேர்தல் பணியை தொடங்கி தேமுதிக!

image

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதையடுத்து தேமுதிகவினர் தற்போது தேர்தல் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விஜயகாந்த் மறைந்து சில மாதங்களே ஆன நிலையில் அவரது மகன் இங்கு போட்டியிடுவதால் அனுதாப வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேமுதிக நிர்வாகிகள் பணியை துவக்கியுள்ளார்.

News March 21, 2024

ராஜபாளையம், ஸ்ரீ.புத்தூர் சட்டமன்ற தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

2024 மக்களவைத் தேர்தல், தென்காசி(தனி) தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீ குமார் போட்டியிடவுள்ளார். மயக்கவியல் நிபுணரான இவர் முதன் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். 2002 முதல் திமுக-வில் இணைந்து பணியாற்றி வருகிறார். தென்காசி தொகுதிக்கு வேட்பாளராக, எம்.பி தனுஷ் குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி உட்பட பலர் முயற்சி செய்த நிலையில் இவர் தேர்வாகியுள்ளார்.

News March 21, 2024

விருதுநகர் அருகே விபத்து; உடல் நசுங்கி மரணம்

image

சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம்.மனைவி ஜோதி (37).நேற்றுமுன்தினம் தந்தை நாகராஜ் உடன் சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் டூவீலரில் தனியார் திரை அரங்கம் வழியாக சென்று கொண்டிருந்தார்.பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது. வாகனம் ஜோதியின் மீது ஏறி இறங்கியது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2024

கருடர் வாகனத்தில் வீதி உலா வந்த பெருமாள்

image

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அருள்மிகு ஸ்ரீ செங்கமலத்தாயர் சமேத சென்னகேசவ பெருமாள் கோயிலில் நேற்று 20.03.2024, இரவு, பங்குனி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளில் பெருமாள் பெரிய திருவடியான கருடனின் வாகனத்தின் மீது ராஜா கம்பீரமான அலங்காரத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News March 20, 2024

ஸ்டார் தொகுதியாக மாறும் விருதுநகர்!

image

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்றுள்ள மாணிக்கம் தாகூருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகருக்கும் பாஜகவில் நடிகை ராதிகா போட்டியிட உள்ளதாகவும் பேசப்படுகிறது. எனவே ஸ்டார் தொகுதியாக இங்கு பிரச்சாரம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

News March 20, 2024

விருதுநகர் தேமுதிக-வுக்கு ஒதுக்கீடு..!

image

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!