Virudunagar

News October 10, 2024

விருதுநகர் ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு

image

விருதுநகர் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 58 விற்பனையாளர் மற்றும் 13 பணியிடங்கள் விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன விற்பனையாளருக்கு பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வி, கட்டுநருக்கு 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் www.drbmadurai.net என்ற இணையத்தில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5.40 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

கஞ்சா கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

image

வெம்பக்கோட்டை சிப்பிப்பாறை வழியாக ஏழாயிரம்பண்ணைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சிப்பிப்பாறை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது கார் மற்றும் பைக்கில் கடத்தி வரப்பட்ட 90 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா கடத்திய தினேஷ்குமார், கணேஷ்குமார், அய்யனார் ஆகிய 3 பேரை கைது செய்து கஞ்சா, கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News October 10, 2024

நிதி நிறுவனத்தில் ரூ.18 லட்சத்தை கையாடல் செய்த மேலாளர்

image

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் வெள்ளைத்துரைபாண்டியன் (47). சிவகாசி திமுக மாநகர பொருளாளரான இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிதி நிறுவனத்தில் திருத்தங்கலை சேர்ந்த அருண் ஆலங்குளம் கிளையில் மேனேஜராக வேலை செய்து வந்தார். அருண் ரூ.18 லட்சத்தை இழப்பு ஏற்படுத்தி நம்பிக்கை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து நிதி நிறுவன உரிமையாளர் கிடைத்த புகாரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 10, 2024

சிறிய ஜவுளி பூங்கா அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக குறைந்தபட்சம் 2 ஏக்கரில் 3 ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் அமைக்க வேண்டும். எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர் துணிநூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவர்களுக்கு போட்டிகள்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி விருதுநகர் ஹாஜிபி மேல்நிலைப் பள்ளியிலும், 24 ஆம் தேதி விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

News October 9, 2024

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை – ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குழந்தை திருமணம் தடைச் சட்டம் 2006 இன் படி குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கடந்த 2023 ஏப்ரல் 1 முதல் தற்போது 2024 மார்ச்.31 வரை 118 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

News October 9, 2024

ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை

image

சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் சிவகாசிக்கு நேரடியாக பட்டாசு வாங்க வருகின்றனர். பட்டாசுகளை வாங்கி செல்வோர் ரயில்,பேருந்துகளில் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் பட்டாசு கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

News October 9, 2024

தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் விருதுநகர் பேராசிரியர்

image

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுபவர் ராமன். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி இந்த ஆண்டு பட்டியலில் இவர் இடம் பெற்றுள்ளார். இவரது சாதனையை கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.

News October 8, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; விருதுநகர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை விற்பனை செய்வது மற்றும் சேமித்து வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு இது போன்ற நெகிழி பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 8, 2024

விருதுநகரில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமா?

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (அக்.08) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் சட்டப்படி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் இணைய வழி (www.tnesevai.tn.gov.in) வாயிலாக வரும் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.