Virudunagar

News October 9, 2025

விருதுநகர்:EXAM இல்லை., TN Rights வேலை ரெடி!

image

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் TN Rights துறையில் பல்வேறு பணிகளுக்கு 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th முதல் பல்வேறு பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் வரை இப்பணிகளுக்கு அக். 14க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்காலம். சம்பளம் ரூ.12,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். திறன் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்படும். இத்தகவலை வேலை தேடும் நபர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News October 9, 2025

நரிக்குடியில் விதி மீறும் வாகனங்களுக்கு அபராதம்

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருச்சுழி மற்றும் நரிக்குடி போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அதில் விதிகளை மீறி செல்லும் டிப்பர் லாரிகளை அதிரடியாக சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்து வருகின்றனர். இதற்காக பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

News October 9, 2025

சிவகாசியில் தாமதமாகும் ரயில்வே மேம்பால பணிகள்

image

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில் பாலத்தின் ஒருபக்க இணைப்பு சாலை இதுவரை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்காக பல்வேறு வெளியூர்களில் இருந்து பட்டாசு வாங்க மக்கள் வருகை தரும் நிலையில் மேம்பாலத்தை விரைந்து திறக்க வலியுறுத்தியுள்ளனர்.

News October 9, 2025

விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News October 9, 2025

விருதுநகர்: சிறுவனின் கழுத்தை அறுத்த கொடூரம்

image

விருதுநகரை சேர்ந்த மருதுபாண்டி- மாரீசுவரி(26) தம்பதியினருக்கு 10 வயதில் மகன் உள்ளார். மாரீசுவரி கணவரை பிரிந்து செல்வத்தை(32) 2-வது திருமணம் செய்தார். திருச்சுழியில் பாட்டி வீட்டில் வசித்த அச்சிறுவன் திருவிழாவிற்காக விருதுநகர் வந்த போது சிறுவனை செல்வம் பந்தனேந்தல் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை கத்தியால் அறுத்து வாயில் பேனாவை குத்தியுள்ளார். சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

News October 9, 2025

விருதுநகர் தீயணைப்புத்துறை சார்பில் இலவச பயிற்சி

image

விருதுநகர் மாவட்டத்தில் அக்.11,12 தேதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நடைபெறுகிறது. நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் பள்ளிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தீ விபத்து நேரங்களில் தற்காப்பு மற்றும் தீயை அணைக்கும் முறைகள் குறித்து செய்முறை விளக்கங்கள் வழங்கப்படும். பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2025

ஸ்ரீவியில் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (56). இவர் பால் கேன் தயார் செய்யும் தகடு விற்பனை செய்து வந்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்புத் துறையினர் பேச்சிமுத்துவின் உடலை மீட்டு ஸ்ரீவி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

News October 9, 2025

சிறுமியிடம் அத்துமீறிய முதியவர் கைது

image

சிவகாசி பகுதியை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (60) என்பவர் மாணவியிடம் மிட்டாய் தருவதாக கூறி தான் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு அழைத்து சென்று சிறுமியிடம் அத்து மீறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி, தனது பாட்டியிடம் கூறியுள்ளார். இதுகுறித்த புகாரில் முதியவரை மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

News October 8, 2025

விருதுநகர்: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

image

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News October 8, 2025

சிவகாசியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

சிவகாசி அருகே ஈஞ்சார் தெற்கு தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (20). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கிச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பரணி ராஜன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

error: Content is protected !!