India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அஞ்சல் துறையில் 44,228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <
சிவகாசியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல் தொடர்பாக சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். பின்னர் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு விளக்கங்களை ஆட்சியர் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி தங்கியிருந்த வளாகத்தில் 2 வீடுகளில் நுழைந்த கொள்ளையர்கள் 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்என் ரவி தங்கியிருந்தபோது நடந்ததா? இல்லாவிட்டால் ஆளுநர் ஆர்என் ரவி அங்கு இல்லாதபோது நடந்ததா? என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. இந்த நிலையில், போலீசார் வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டியுள்ளார்.
வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் வத்திராயிருப்பு நாடார் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர் ஜெகதீசன் பலகையில் நூல்களை கட்டி ஆசிரியர்களிடம் வழங்கினார். அந்தப் பலகையை சுவரில் மாட்டிய போது நூலில் உள்ள இடைவெளியில் காமராஜர் உருவம் தத்ரூபமாக தெரிந்தது. மாணவரின் இந்த முயற்சியை தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் நாளை (16.07.2024) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சிவகாசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் நுகர்வோர்களிடமிருந்து மனுக்கள் பெற்று தீர்வு காண உள்ளார். எனவே பொதுமக்கள் மின் தொடர்பான குறைகள் இருந்தால் மனுக்களாக கொடுத்து தீர்வு பெறலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
விருதுநகர் ராம்கோ சிமெண்ட் ஆலை வளாக குடியிருப்பு பகுதியில் உள்ள துணை பொது மேலாளர்கள் பாலமுருகன், ராமச்சந்திரன் ஆகிய இருவரின் வீடுகளில் 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். நேற்று இதே வளாகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து 38 கிளைகளிலும் வரும் ஜூலை 18ஆம் தேதி கடன் மேளா மற்றும் டெபாசிட் மேளா நடைபெற உள்ளது. இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் அரசின் சேவைகள் விரைவாக மக்களை சென்று சேரும் வகையில் 2ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறுகிறது. இதில் ஜூலை 16ஆம் தேதி அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வட்டாரங்களில் முகாம்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் மனைவி அல்லது விதவை அல்லது திருமணமாகாத மகள்கள் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று அப்பயிற்சி நிறுவனத்தின் மூலம் தையல் இயந்திரம் பெறாமல் இருந்தால் ஜூலை 25 க்குள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்டம் முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி பயன்படலாம் என தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும் குரூப் 1 பதவிக்கான தேர்வில் பங்கேற்பதற்காக மாவட்டத்திலிருந்து 6,898 பேர் விண்ணப்பித்தனர். இந்த தேர்வுக்காக 25 மையங்கள் ஒதுக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று நடந்த குரூப் 1 தேர்வில் 4,671 பேர் பங்கேற்றனர். இதில் 2,227 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.