Virudunagar

News May 11, 2024

விருதுநகர் அவார்ட் சிட்டி தீம் பார்க் அம்சங்கள்

image

அவார்ட் சிட்டி தீம் பார்க், விருதுநகர் வடமலைகுறிச்சி எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்லும் இந்த தீம் பார்க்கில் குளித்து விளையாடும் வகையில் நீர் சறுக்கு விளையாட்டுகள், செயற்கை அருவி, பாத்டப், ரெயின் டிஸ்கோ போன்ற தண்ணீர் விளையாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது சிறிய தீம் பார்க்காக இருந்தாலும், உள்ளூரிலேயே இருப்பதால் அனைவரின் விருப்பமான ஒன்றாகும்.

News May 11, 2024

விருதுநகர்: 13 குழந்தை திருமணங்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 13 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு அவற்றின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

News May 11, 2024

விருதுநகர்: 82 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 82 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பை முடிக்காத போர் மேன்கள் கண்காணிப்பாளர்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தி செய்வது தெரிந்தால் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 11, 2024

10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி

image

தமிழகத்தில் நேற்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியில் செயல்படும் சி. இ. ஓ. ஏ. பள்ளி மாணவி கேசவப்ரியா 498 மார்க் எடுத்து மாநில அளவில் 2வது இடத்தையும், விருதுநகர் மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவியை
பள்ளி நிர்வாகி, முதல்வர், ஆசியர்கள் பாராட்டினர்.

News May 10, 2024

விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பட்டாசு ஆலைகளில் உள்வாடகை மற்றும் உள்குத்தகை மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவினை விட கூடுதலாக ரசாயனங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்கரிக்கை விடுத்துள்ளார். மேலும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

News May 10, 2024

பட்டாசு ஆலை அதிபருக்கு வலைவீச்சு

image

சிவகாசி அருகே கீழ திருத்தங்கல்லில் நேற்று சரவணன் என்பதற்கு சுத்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்து தொடர்பாக ஆலை குத்தகைதாரர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகிய இருவரை இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளர் சரவணனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

News May 10, 2024

காரியாபட்டி மாணவி அசத்தல் 

image

காரியாபட்டி அருகே எஸ்.மறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் – விமலாதேவி தம்பதியரின் மகள் சாருபிரீத்தி. இவர் காரியாபட்டி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் நான்காவது இடமும், விருதுநகர் மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதல் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

News May 10, 2024

விருதுநகரில் 7 நாட்களுக்கு மழை

image

தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

News May 10, 2024

விருதுநகர் 8ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.79% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.53 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.9 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 8 ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!