Virudunagar

News May 13, 2024

விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி ஏதேனும் செயல்படுவதாக தெரியவரும் பட்சத்தில் அதுகுறித்த தகவல்களை காவல்துறையின் மூலமாக வழங்கப்பட்டுள்ள 94439 67578 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 13, 2024

விருதுநகர் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளம்!

image

சிவகாசி அருகே தச்சகுடியிலிருந்து தாழைப்பட்டி செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கடந்தாண்டு அமைக்கப்பட்ட தார் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் கிராம மக்கள் பள்ளத்தை சரி செய்யாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News May 13, 2024

விருதுநகர்: இன்று மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

News May 13, 2024

பட்டாசு ஆலை வெடி விபத்து: 3 பேர் மீது வழக்கு

image

விருதுநகர், சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் நேற்று காலை மகேஸ்வரி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் தரைமட்டமான நிலையில் வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் ராஜாராம், ஃபோர்மேன்கள் கருப்பசாமி, ஜெயராம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
முந்தைய தினம் கலவை செய்த மருந்தை இருப்பு வைத்த நிலையில் ரசாயன மூலப்பொருளில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. 

News May 12, 2024

நாளை முதல் அதிரடி நடவடிக்கை

image

விருதுநகர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப நாட்களாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெடி விபத்துக்களை தடுக்கும் வகையில் விதிமீறல்களை கண்டறிய மாவட்ட ஆட்சியர் 4 சிறப்பு குழுக்களை நியமித்து அக்குழுவினர் நாளை முதல் தீவிர ஆய்வில் ஈடுபட உள்ளனர். விதிமீறல் கண்டறியப்பட்டால் உடனே ஆலை நிர்வாகம் மீது இக்குழு நடவடிக்கை எடுக்கும்.

News May 12, 2024

குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

விருதுநகர் இருப்பு பாதை காவல் நிலைய காவலர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையங்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விருதுநகர் காந்தி சிலை முன்பு துவங்கிய இந்த ஊர்வலம் ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர் நடைமேடையில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ரயில்வே காவல்துறையினர் வழங்கினர்.

News May 12, 2024

விருதுநகர் அருகே வெட்டி படுகொலை 

image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார் புரத்தில் ஞானசேகர் என்பவர் வெட்டிக் படுகொலை. ஞானசேகர் என்பவரின் உடலை மீட்டு ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் புறா வளர்த்ததில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்த மணிகண்டன், நாகராஜ், பேச்சிமுத்து ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

News May 12, 2024

விருதுநகர் அருகே விபத்து; மரணம்

image

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (45). இவர் அந்த பகுதியில் மைக்செட் போடும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 8ஆம் தேதி இரவு சிவகாசி – சாத்தூர் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த பைக் மோதி பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News May 11, 2024

விருதுநகரில் நாளை மழைக்கு வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News May 11, 2024

விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

error: Content is protected !!