Virudunagar

News July 26, 2024

ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நுகர்வோர் நீதி மன்றம்

image

சிவகாசியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ.2.66 லட்சத்திற்கு வாங்கிய ஜீப்பில் பழைய என்ஜினை மாற்றி விற்பனை செய்ததாக கூறி மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி முத்துகிருஷ்ணனுக்கு ரூ.2.66 லட்சத்தை திரும்ப வழங்க வேண்டும்.மேலும் நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம், வழக்கு செலவிற்காக ரூ.10000 வழங்க நேற்று உத்தரவிட்டார்.

News July 25, 2024

தொண்டர்களுக்கு அமைச்சர்கள் அழைப்பு

image

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசைக் கண்டித்து வரும் 27 ஆம் தேதி விருதுநகர் மாரியம்மன் கோயில் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

News July 25, 2024

சிவகாசி இளைஞர் ஆணவக்கொலை அல்ல

image

சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவக்கொலை செய்யப்படவில்லை என விருதுநகர் எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார். கொலையான கார்த்திக் பாண்டியனும், அவரது காதல் மனைவியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதல் திருமணம் செய்து அதே பகுதியில் வாழ்ந்து வந்த நிலையில் பெண்ணின் சகோதர்கள் கொலை செய்ததாக விருதுநகர் எஸ்.பி. பெரோஸ்கான் கூறியுள்ளார்.

News July 25, 2024

விருதுநகரில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை

image

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் கார்த்திக்பாண்டி (26). சிவகாசியைச் சேர்ந்த நந்தினி என்ற கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு தனது மனைவியுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பைக்கை வழிமறித்து மர்ம நபர்கள் கார்த்திக்பாண்டியை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 25, 2024

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று (ஜூலை 24) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தங்களது விண்ணப்பத்தை மாற்றுத்திறனாளிகள் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 24, 2024

விருதுநகரில் ‘காபி வித் கலெக்டர்’

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஜூலை 24) சாத்தூர் சன் இந்தியா மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 40 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ‘காபி வித் கலெக்டர்’ என்ற 86வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் உயர் கல்வி குறித்து வழிகாட்டுதல் வழங்கினார்.

News July 24, 2024

இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் விருதுநகர் மாணவர்கள்

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் பயிலும் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் அறிவியல் களப்பயணமாக திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகம் மற்றும் திருநெல்வேலி அறிவியல் மையம் ஆகிய இடங்களுக்கு இன்று (ஜூலை 24) அழைத்துச் செல்லப்பட்டனர்.

News July 24, 2024

தமிழ் செம்மல் விருது பெற அழைப்பு

image

தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றி வரும் ஆர்வலர்களை கண்டறிந்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டு தோறும் மாவட்டத்திற்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு “தமிழ் செம்மல்” விருது வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், விருதுநகர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2024ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருது பெற தகுதியானவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News July 24, 2024

விருதுநகர்: இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு லேசான மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 24, 2024

வேலை வாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

image

ஜியோ நிறுவனம் 4000-த்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யவுள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் 300க்கும் மேற்பட்ட பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. இதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ஆம் தேதி சூலக்கரையில் உள்ள மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில், 18-45 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!