India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் பழமையான ஊர்களில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கூறப்படுகிறது. மல்லி என்ற குறவ ராணியின் மகனான வில்லிக்கு பெருமாள் காட்சி தந்து அறிவுறுத்தியதன் பேரில், காட்டை திருத்தி கோயில் கட்டி அழகிய நகரை உருவாகினான் என்பது புராணம். இதனாலேயே ‘வில்லிபுத்தூர்’ என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. உங்கள் விருதுநகர் நண்பர்களுக்கு இது தெரியுமா?
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று (ஜூலை 29) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 வீதம் மொத்தம் ரூ.18,000 மதிப்புள்ள தையல் இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (ஜூலை 29) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் சூரிய சக்தியால் தனித்து இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் விருப்பமுள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மண்டல இணை பதிவாளர் செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாத்துாரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு www.tncu.tn.gov.in என்ற இணையத்தில் ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். பதிவேற்றிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மேலாண்மை நிலையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்திலும் மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
விருதுகள் அள்ளிய மல்யுத்த வீரன் சவால் விடுத்துள்ளான். அப்போது ஆண்டித் தேவர் என்பவர் சவாலை ஏற்றுக்கொண்டு, போரிட்டு வென்று அவனது விருதுகளை வெட்டி சாய்த்துள்ளார். இந்த மல்யுத்தம் நடந்த இடம் தற்போதைய தேசபந்து மைதானம். விருதுகளை வெட்டி எரிந்த இடம் என்பதால் ‘விருது வெட்டி’ என பெயரானது. 1875ல் விருதுப்பட்டி என மாறி தற்போது ‘விருதுநகர்’ என்றானதாக தகவல். விருதுநகர் குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
விருதுநகர் அருகே உள்ள ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை குடியிருப்பில் துணை மேலாளர் வீட்டில் 80 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூன்று பேரை கைது செய்து நகைகளை மீட்டெடுக்க மத்தியப்பிரதேசத்தில் போலீசார் முகாமிட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முறையாக சிவகாசி மாநகரில் பட்டாசு வர்த்தக கண்காட்சி மற்றும் பட்டாசு பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடு ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஜா போஸ் காஞ்சனா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில், தமிழக அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் பட்டாசு வணிக பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்க்கு இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 7 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மேற்கு எல்லையில் செண்பகவல்லி அணை அமைந்துள்ளது. இதனால் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 10,924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 1967 இல் ஏற்பட்ட வெள்ளத்தில் 30 மீட்டருக்கு அனையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய கேரள அரசுடன் தமிழக அரசு பேசி வந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சரிசெய்யப்படாததால் இத்திட்டம் கைவிடப்பட்டு விட்டதோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.