India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளிக்குடியை சேர்ந்த ராகுல்(20), மையிட்டான்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(21) ஆகியோர் முட்டை வண்டியில் லோடு மேனாக பணியாற்றி வந்தனர். நேற்று காலை இருவரும் விருதுநகரில் நண்பர்களை பார்த்து விட்டு கள்ளிக்குடி நோக்கி டூவிலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வடமலைக்குறிச்சி அருகே சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் டூவிலர் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் கார்த்திக் ராஜா உயிரிழந்தார்.
வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அகழாய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு குழிகளுக்குள் தண்ணீர் தேங்குவதால் தொடர்ந்த அகழாய்வு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால் தற்காலிகமாக அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 1 பொதுத் தேர்வில் உயிரியல் தேர்வினை 3149 மாணவர்களும் 4928 மாணவிகளும் ஆக மொத்தம் 8077 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 7965 பேர் தேர்வு எழுதிய நிலையில் 112 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதே போல் தாவரவியத் தேர்வில் 78 பேரும் வணிக கணக்கியல் தேர்வில் 6 பேரும் வரலாறு தேர்வில் 176 பேரும் பங்கேற்கவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சித்தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை(மார்ச்.19) பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே லீபுரம் பாட்டுக்குளத்தில் 2 நாட்களுக்கு முன் எரிந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் சிவகாசி விளாம்பட்டியை சேர்ந்த ஹரிஹரசுதன் என்பதும், அவர் தூத்துக்குடியில் கொத்தனார் வேலை செய்த போது பழக்கமான லீபுரம் ராபர்ட்சிங்குடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஹரிஹரசுதன் அடித்து கொலை செய்து எரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த மகேந்திரா ராஜா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபடி டி,என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இவரிடம் திருவாரூரை சேர்ந்த ரம்யா என்பவர் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.7 லட்சமும், இவரது தம்பி முரளிக்கு அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.4.5 லட்சமும் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து சாத்தூர் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசியில் நாளை (18.03.2025) மின் நுகர்வோர் கூட்டம் நடைபெற உள்ளது. மின்செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின் விநியோகம் சார்ந்த குறைகளை நேரிலோ அல்லது மனுவாகவோ வழங்கி தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
திருச்சுழி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படும் தினேஷ் என்பவர் இன்று டூவீலரில் சென்ற போது பாளையம்பட்டி தனியார் மகால் அருகே விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்தார். இதனை அடுத்து உடனடியாக மீட்கப்பட்ட அவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகாசி ஆலாவூரணியை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் முனீஸ் நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். அவரது உடலை மீட்ட போலீசார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாரியம்மன் கோவிலில் பொங்கலை முன்னிட்டு வேண்டுதலுக்காக மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்கி வைத்து வழிபடுவது வழக்கம். திருமண வரன் வேண்டுவோர் ஜோடி பொம்மைகளையும், உடல் நலம் பெற ஆண், பெண் பொம்மைகளையும், குழந்தை வரன் வேண்டுவோர் குழந்தை பொம்மைகளையும், வீடு கட்ட வேண்டுவோர் வீடு பொம்மையும் வாங்கி வைத்து வழிபடுவர். பொம்மைகளை வாங்கி வைத்து வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்பது நம்பிக்கை. SHARE IT
Sorry, no posts matched your criteria.