India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று(மார்ச்.28) நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “திமுக ஆட்சியில் முறைகேட்டை ஆதாரப்பூர்வமாக ஆளுநரிடம் அளித்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் நடுநிலையோடு நடக்க வேண்டும்” என கூறினார்.
பாஜக வேட்பாளர் ராதிகாவின் அசையும் அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.53,45,34,012 ஆக உள்ளது. இவருடைய மாற்று வேட்பாளர் சரத்குமாருக்கு அசையும் அசையா சொத்துக்கள் என 29,82,57,684 ஆக உள்ளது. காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் அசையும் அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.2,39,75,095 ஆகும். தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனின் அசையும் அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.17,95,59,371 ஆக உள்ளது.
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநில அளவிலான தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வினாடி வினா போட்டி விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் வரும் 30- ஆம் தேதி நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.பதிவு செய்ய இன்றே (28-03-2024) கடைசி நாள்.போட்டியில் முதல் பரிசுக்கு 25,000, இரண்டாம் பரிசுக்கு 15,000, மூன்றாம் பரிசுக்கு 10,000 ருபாய் வழங்கப்படுகிறது.
விருதுநகர் லோக்சபா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் மார்ச் 21ம் தேதி அன்று ஒரு வேட்பு மனுவும், மார்ச் 25ம் தேதி அன்று 15 வேட்பு மனுவும், மார்ச் 26ம் தேதி என்று 7 வேட்பு மனுவும், மார்ச் 27ம் தேதி அன்று 18 வேட்பு மனு என மொத்தம் 41 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவை இன்று பரிசீலனை செய்யப்பட உள்ளன. மேலும் மார்ச் 30 ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் நேற்று மாலை என் புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டு அரிவாளை காட்டி சாலையில் செல்வோரை மிரட்டியுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டிய இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை விருதுநகர் சிவகாசி இரு கல்வி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் 22,005 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 10,589 மாணவர்கள் 10,924 மாணவிகள் என 21,513 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 492 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இன்று (27.3.24) 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு இந்த செல்பி பாயிண்ட் திறந்து வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற துண்டு பிரசுரங்களையும் தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
விருதுநகர் தொகுதிக்கு தற்போது வரை 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காங்கிரஸ் தேமுதிக பாஜக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று ஒரே நாளில் சுயேச்சை மாற்று வேட்பாளர் உள்ளிட்ட 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ மூலமாக 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் நேற்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலியில் இருந்து பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.