India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 01.08.2024 முதல் 16.08.2024 வரை நடைபெறுகிறது. இதில் தகுதியுடையோர் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.
காரியாபட்டி பி. புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி தலைமை வகித்து பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2024-25 காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்படலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் ஆக.9 ஆம் தேதிக்குள் உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயனடையுமாறு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை கண்காணிக்கவும்,மழை நேரங்களில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (அக.2) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 1/6/2024 முதல் 30/6/2024 வரை 22 குழந்தைகள் திருமணங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 வயது நிரம்பாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பான 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் நடந்தால் 1098 க்கு தகவல் தெரிவிக்கலாம்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 – 5 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.,2) திருப்பூர் மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் பணிபுரிந்த பாலசுப்பிரமணி என்பவர் சதுரகிரி கோயிலுக்கு நடந்து செல்லும்போது பசுகிடை என்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சாத்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாத்தூர் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில், இன்று(ஆக.,2) இருகன்குடி கோயிலுக்கு பாதையாத்திரை சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பக்தர்கள் முருகன், மகேஷ், பவுன் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசின் பட்ஜெட் அறிவிப்பில் தமிழகம் இடம்பெறாததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 38 பெண்கள் உள்ளிட்ட 103 பேரை போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் வீடு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். தகுதியுடைய நபர்கள் வரும் ஆக.9க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் லஞ்சம் வாங்கியதாக 4 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ரூ.25,000 லஞ்சம் வாங்கிய டி.கடமன்குளம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், ரூ.14,800 வாங்கிய சேத்தூர் சார்பதிவாளர் கார்த்திகேயன், ரூ.15,000 வாங்கிய துலுக்கப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் நாகராஜன், ரூ.10,000 வாங்கிய வெம்பக்கோட்டை மின் உதவி செயற்பொறியாளர் சேதுராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.