India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது வீட்டில் மே 27ஆம் தேதி மதியம் உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மர்ம நபர் ஒருவர் வீட்டில் பீரோவை உடைத்து 3 பவுன் தங்க செயினை திருடி சென்றார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சிக்கந்தர் என்பவர் திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (மே.31) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேன்மொழி நகர், முத்தரையர் நகர், பாளையம்பட்டி கிழக்கு மற்றும் பஜார் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூர் கிராமத்தில் உள்ள ஆற்றில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பதாகவும் , ஆற்றில் கால் வைத்தாலே ஊசி போன்ற மருத்துவ கழிவுகள் காலை பதம் பார்த்து விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கௌசிகா மகாநதி ஆற்றில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் ஆறு மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கோடை மழை முடிவடைந்து, ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்த டிஜிட்டல் லிட்டரசி தொடர்பான பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
விருதுநகர்,கமுதி அருகே முத்துப்பட்டியை சேர்ந்தவர் உக்கிர பாண்டி(52).இவரது குடும்பத்தாருக்கும் திருச்சுழி அருகே அம்மன் பட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று அம்மன் பட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின்போது இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.திருச்சுழி போலீசார் இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
விருதுநகர் பாரதிநகரை சேர்ந்தவர் சந்திரன். இவர் மே 27ஆம் தேதி வேலைக்குச் சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது உள் தாழ்பாள் போடப்பட்டிருந்தது அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த மூன்று பவுன் செயினை அடையாளம் தெரியாத நபர் திருடி மாடி வழியாக தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து மேற்கு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காவலர் குடும்ப நல மையம் சார்பாக மகிழ்ச்சி திட்டம் சென்னை மாநகரில் 2021 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விருதுநகர் மாவட்ட போலீசார் பயன்பெறும் வகையில் தென் மண்டல ஐஜி உத்தரவின் பெயரில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விருதுநகர் சூலக்கரையில் உள்ள தனியார் திருமண அரங்கில் நேற்று பயிற்சி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு.
வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் சிறு பட்டாசு ஆடைகளை குறிவைத்து ஆய்வு நடத்தப்படுவதை கண்டித்து தமிழன் பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்று (30.05.2024)7வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக 200க்கும் மேற்பட்ட ஆலைகளில் பணியாற்றும் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.