Virudunagar

News June 4, 2024

விஜயபிரபாகரன் தொடர் முன்னிலை

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 3ஆவது சுற்றில் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 17,450 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 22,597 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 6651 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 4570 வாக்குகளும் பெற்றுள்ளனர். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 7853 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

முதல் சுற்றில் தேமுதிக முன்னிலை

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி முதல் சுற்றில் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 19,493 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 19,680 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 9022 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 4379 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் முதல் சுற்றில் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

Live: விருதுநகர் தேமுதிக தொடர்ந்து முன்னிலை

image

விருதுநகர் மக்களவை தொகுதியின் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 38068 வாக்குகள், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 40774 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15634 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு 8426 வாக்குகள் பெற்றுள்ளார்.

News June 4, 2024

விருதுநகர் தேமுதிக முன்னிலை

image

விருதுநகர் மக்களவை தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 19,493 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 19,680 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 9,022 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு 4,379 வாக்குகள் பெற்றுள்ளார்.

News June 4, 2024

விஜயபிரபாகரன் முன்னிலை

image

விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் தற்போது தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னணியில் உள்ளார்.

News June 4, 2024

விருதுநகர்: ராதிகா சரத்குமார் பின்னடைவு!

image

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ராதிகா சரத்குமார் பின்னடைவில் உள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மொத்தம் 70.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர்,தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன்,பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் சார்பில் கௌசிக் போட்டியிட்டுள்ளனர்.

News June 4, 2024

விருதுநகர்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

விருதுநகரின் மகுடம் யாருக்கு?

image

2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மொத்தம் 70.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர்,தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன்,பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் சார்பில் கௌசிக் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

சிவகாசியை அதிர வைத்த கொலை

image

சிவகாசி முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்துப்பாண்டி (38). இவர் இன்று இரவு சிவகாசி அண்ணா காலனி பகுதியில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு கொலை செய்த மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 3, 2024

வத்திராயிருப்பு:வனத்துறை அறிவுறுத்தல்

image

வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனினும் நேற்று மாலை முதல் வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால்,பக்தர்கள் சதுரகிரி வருவதை தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும்,அனுமதிக்கப்பட்ட நாட்களில் தினசரி மழைப்பொழிவு மற்றும் ஆறுகளில் நீர்வரத்தை பொறுத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.

error: Content is protected !!