Virudunagar

News June 4, 2024

விருதுநகரில் வெற்றி பெற்றதாக போஸ்டர்..!

image

விருதுநகரில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இழுபறி அடைந்து, வெற்றி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தேமுதிக நிர்வாகிகள் விஜய பிரபாகரன் வெற்றி அடைந்ததாக திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். ஆனால் அவர் தற்போது 3, 843 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

News June 4, 2024

194 வாக்கு வித்தியாசத்தில் விஜயபிரபாகரன்

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 10வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 18,350 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 20,571 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 10022 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3535 வாக்குகளும் பெற்றுள்ளனர். 10வது சுற்றின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 194 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஒன்பதாவது சுற்று முடிவுகள் வெளியீடு

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 9 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 174091 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 172064 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 67051 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக் – 33925 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 9 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2027 வாக்குகள் பெற்று முன்னிலை.

News June 4, 2024

8 ஆ வது சுற்று முடிவுகள் வெளியீடு: காங்கிரஸ் முன்னிலை!

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 8 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 151830 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 151039 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 58285 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 29959 வாக்குகளும் பெற்றுள்ளனர். 8 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 792 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

மாணிக்கம் தாகூர் தொடர் முன்னிலை

image

விருதுநகர் தொகுதியில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேமுதிக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேமுதிகவின் விஜய பிரபாகரனைவிட, காங்கிரசின் மாணிக்கம் தாகூர் 203 வாக்குகள் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது 1078 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதனால், விருதுநகர் தொகுதியில் தேமுதிக- காங்கிரஸ் மாறிமாறி முன்னிலை வகிக்கிறது.

News June 4, 2024

விருதுநகரில் மாணிக்கம் தாகூர் முன்னிலை

image

விருதுநகர் தொகுதியில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேமுதிக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேமுதிகவின் விஜய பிரபாகரனைவிட, காங்கிரசின் மாணிக்கம் தாகூர் 203 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதனால், விருதுநகர் தொகுதியில் தேமுதிக- காங்கிரஸ் மாறிமாறி முன்னிலை வகிக்கிறது.

News June 4, 2024

தேமுதிக- காங்கிரஸ் கடும் போட்டி

image

விருதுநகர் தொகுதியில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேமுதிக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேமுதிகவின் விஜய பிரபாகரன், காங்கிரசின் மாணிக்கம் தாகூரை விட 32 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

விருதுநகரில் ஆறாவது சுற்று முடிவுகள் வெளியீடு

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 6 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 20 704 வாக்குகள், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 17004 வாக்குகள், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 7842 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3435 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 6வது சுற்றின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 975 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

விருதுநகரில் 5ஆவது சுற்று வெளியீடு

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 5வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 19821 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 16326 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 6738 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3367 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 5வது சுற்றின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 5119 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

நான்காவது சுற்றிலும் விஜய பிரபாகரன் அசத்தல்

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 4வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 19263 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 20024 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 7538 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3938 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 4வது சுற்றின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 8614 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

error: Content is protected !!