Virudunagar

News April 30, 2024

விருதுநகர்: காலனியில் குடிநீருடன் கலக்கும் கழிவு நீர்!

image

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு பேராசிரியர் காலனியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றத்துடன் வருவதால் குடியிருப்போர் அவதி அடைந்து வருகின்றனர். பேராசிரியர் காலனிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.15 நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது வேதனை அளிப்பதாகவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

News April 30, 2024

விருதுநகர் ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

image

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நான் முதல்வன் திட்டம் மூலம் உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்தும் 12ஆம் வகுப்பு முடித்து அனைத்து மாணவர்களையும் 100% உயர்கல்வி சேர்க்கை பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News April 30, 2024

மே 3 முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி..!

image

சிவகாசியில் முதன் முறையாக பர்னிச்சர் எக்ஸ்போ 2024 நடைபெற உள்ளது. விருதுநகர் பைபாஸ் சாலையில் உள்ள கம்மவார் திருமண மஹாலில் மே 3 முதல் மே 12 வரை 10 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அனுமதி இலவசம் என்பதால் அனைத்து பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்டுள்ளது . இதில் பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் பல்வேறு புதிய வகையில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

News April 30, 2024

சிவகாசி மக்களை குளிர்வித்த சாரல் மழை

image

சிவகாசியில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பெய்த சாரல் மழையால் பூமி நன்கு குளிர்ந்து இதமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கத்தில் இருந்து வந்த மக்களுக்கு நேற்று பெய்த சாரல் மழை சற்று குளிர்ச்சியை தந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 29, 2024

விருதுநகர் ஆட்சியர் முக்கிய தகவல்

image

2024 ஆம் ஆண்டிற்கான மாநில இளைஞர் விருது எதிர்வரும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 2024க்கு தகுதியானவர்கள் (www.sdattn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

விருதுநகர்: நிர்மலா தேவிக்கு தண்டனை அறிவிப்பு

image

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக – கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக 2018-ல் தொடரப்பட்ட வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் பேராசிரியை நிர்மலா தேவி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது இதையடுத்து பேராசிரியை நிர்மலா தேவிக்கு தண்டனை விவரங்கள் நாளை வெளியாகும் என ஸ்ரீவி மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.

News April 29, 2024

விருதுநகர்:முருகன்,கருப்பசாமி ஆகியோர் விடுதலை

image

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்த வழக்கில் இருந்த முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்

News April 28, 2024

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் நாளை தீர்ப்பு

image

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ஸ்ரீவி. மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

News April 28, 2024

விருதுநகர் மாவட்டத்தில் மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News April 28, 2024

விருதுநகரில் இலவச கண் சிகிச்சை முகாம் 

image

விருதுநகர் திருவள்ளுவர் வித்யாசாலா நடுநிலைப் பள்ளியில் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.பின்னர் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

error: Content is protected !!