India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம், தேவர்குளம் ஊராட்சியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.32.80 இலட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (06.5.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
விருதுநகர், சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ரசாயன பொருட்கள் தயாரிக்கும் குடோனில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான காமராஜர் அவர்களின் சொந்த ஊரான விருதுநகரில் உள்ள அவரின் இல்லம், நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. அவரின் இல்லம் முழுவதிலும் அவரின் அரிய புகைப்படங்கள் மற்றும் அவரின் ஆடை, கடிகாரம் உட்பட்ட சில உடமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் படித்த புத்தகங்களும் உள்ளன. அதில் பாதிக்கு மேல் ஆங்கில புத்தகங்களே.
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியவர்களின் ரிசல்ட் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வினை 21, 277 மாணவ, மாணவியர் எழுதினர். இதில் 20, 562 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.64 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 6-வது இடத்தில் விருதுநகர் மாவட்டம் பிடித்துள்ளது.முதலில் விருதுநகர் 5-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது
விருதுநகர் மாவட்டத்தில் +2 பொது தேர்வில் 9,743 மாணவர்களும் 11,534 மாணவிகளும் என மொத்தம் 21,277 தேர்வு எழுதியுள்ளனர். இன்று வெளியான தேர்வு முடிவில் 9,251 மாணவர்களும் (94.95%) 11,311 மாணவிகளும் (98.07.%) என மொத்தம் 20,562 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் மொத்தம்: 96.64% ஆகும். இதன் மூலம் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 5ம் இடம் பெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக குவாரிகளின் நடைபெற்ற ஆய்வில் 5 பாறைகளில் உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் செயல்படும் குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.சட்ட விதிகளை மீறி செயல்படும் வாரிசு குத்தகைதாரர்களின் மீது தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்
அருப்புக்கோட்டை அன்பு நகரை சேர்ந்தவர் நல்ல கருங்கண் (29).இவர் அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் காட்டுப் பகுதியில் கிடை அமைத்து அதில் ஆடுகளை கட்டி மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.இந்நிலையில் இந்தக் கிடையில் திடீரென தீ பிடித்து கிடையில் இருந்து 30 குட்டி ஆடுகள் தீயில் எரிந்து கருகி உயிரிழந்தன.இதுகுறித்து நல்ல கருங்கண் புகாரின் பேரில் டவுன் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நேற்று பட்டாசு மற்றும் வெடிபொருள் விற்பனையாளர்கள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா, சட்டத்திற்கு புறம்பாக உரிய அனுமதியோ உரிமம் இல்லாமல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
கடந்த 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் 31 வரை ஓராண்டில் மட்டும் கிணறு, கண்மாய்கள், தெப்பம் என நீர் நிலைகளில் குளிக்கச் சென்று தடுமாறி தவறி விழுந்து என பல வகைகளில் 70 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 60 சதவீதத்திற்கும் மேல் பள்ளி கல்லூரி மாணவர்களை உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட்ட நிலையில் நீர்நிலை விபத்துக்களை தடுப்பது அவசியமாகியுள்ளது.
தாயில்பட்டி அருகேயுள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கணித பேராசிரியர் ராம் குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி தாளாளர் பிருந்தா ராகவன் நிர்வாக உரையாற்றினார். பெற்றோர்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உள்ள உறவை பற்றியும் பெற்றோர்களை மதிப்பது குறித்து விளக்கப்பட்டது
Sorry, no posts matched your criteria.