Virudunagar

News May 9, 2024

விருதுநகர் அருகே சித்திரை திருவிழாவில் மத நல்லிணக்கம்!

image

சிவகாசி சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்து வரும் நிலையில் பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் இஸ்லாமியர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு மோர், குளிர்பானம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News May 8, 2024

விருதுநகர் அருகே இறந்தவர்களுக்கு அஞ்சலி

image

சிவகாசியில் கடந்த 1997-ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு சிவகாசி- எரிச்சநத்தம் ரோட்டில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை சார்பில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

News May 8, 2024

விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு!

image

விருதுநகரில் பொருத்தவரையில் மொத்தம் 14 வாகன புகை பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்நிலையில் அனைத்து வகை புகை பரிசோதனை நிலையங்கள் கடந்த மே 6 ஆம் தேதி முதல் புதிய தொழில்நுட்பத்தை (PUCC 2.0 VERSION) பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார். அவ்வாறு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத புகை பரிசோதனை நிலையங்கள் மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 8, 2024

சுட்டெரிக்கும் வெயிலால் எலுமிச்சம்பழம் விலை உயர்வு

image

விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து எலுமிச்சை விற்பனைக்காக நாள்தோறும் கொண்டுவரப்படுகிறது. தற்பொழுது வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சையின் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில் எலுமிச்சை வரத்தும் போதிய அளவில் இல்லை. இதன் காரணமாக சந்தையில் எலுமிச்சம் பழம் விலை உயர்ந்துள்ளது. மே முதல் வாரம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை 240 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News May 8, 2024

விருதுநகர் அருகே 14 பேர் சிக்கினர் 

image

அருப்புக்கோட்டை அருகே பொய்யாங்குளத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ் (31). இவரது குடும்பத்தாருக்கும் அதே ஊரை சேர்ந்த மாணிக்கம் குடும்பத்தாருக்கும் ஊர் பொங்கல் விழாவில் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முன் விரோதம் காரணமாக இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறிதாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. தாலுகா போலீசார் நேற்று இரு குடும்பத்தை சேர்ந்த 14 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

News May 8, 2024

விருதுநகர்:குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா!

image

சிவகாசி பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 9ம் நாள் திருவிழாவான இன்று பத்திரகாளியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் வீதியில் வீதியுலா வந்த பத்ரகாளியம்மனுக்கு பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் திரளானோர் அம்மனை வழிபட்டனர்.

News May 7, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கும் தமிழக அரசின் சிறந்த தொழில் நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
விண்ணப்பப் படிவங்களை awards.fametn.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 7, 2024

விருதுநகரில் 2 நாள் மழை..!

image

தமிழ்நாட்டில் கொடை வெயிலுக்கு பிரேக் கொடுக்கும் வகையில் அடுத்த இரு நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

News May 7, 2024

விருதுநகர் அருகே வனத்துறையினர் அதிரடி தடை

image

காரியாபட்டி காவல் நிலையத்தை சுற்றி 100 மீட்டருக்கு பட்டாசு வெடிக்க, மேளதாளம் முழங்க வனத்துறை தடை விதித்துள்ளது. காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஆலமரத்தில் பழந்தின்னி வௌவ்வால்கள் தங்கி வரும் நிலையில் அவற்றை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News May 6, 2024

இலையில் அப்துல் கலாமை ஓவியமாக வரைந்து அசத்தல்

image

சிவகாசி அருகே அதிவீரன்பட்டியை சேர்ந்த அய்யனார்-ஜெயலட்சுமி தம்பதியின் மகன் A.J.சரண் சந்ரேஷ். ஏழாம் வகுப்பு மாணவரான இவர் சிறு வயது முதல் ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அப்துல் கலாம் அவர்களின் நினைவை போற்றும் வகையில் அரசமர இலையில் அப்துல்கலாமின் திருவுருவத்தை தத்துருவமாக ஓவியமாக வரைந்து அசத்தியுள்ள மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

error: Content is protected !!