India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 12 புகார் மனுக்களும், காவலர்களிடமிருந்து 74 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
விருதுநகரில் குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மே 1 முதல் 31 வரை 21 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு அவற்றின் மீது வழக்குகள் பதிவு செய்தனர்.18 வயது பூர்த்தி அடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் பகுதியில் நாளை உயர் அழுத்த மின் பாதையில் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தெப்பம்,பஜார் வாடி, என் தெரு, கசாப்புக்காரர் தெரு, உள் தெரு,ஐசிஐ காலனி ராமமூர்த்தி ரோடு, கம்மாபட்டி காலேஜ் ரோடு ,பட்டேல் ரோடு, குட்செட் ரோடு எம்எஸ்பி நகர் ஆகிய பகுதிகளுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டுக்களுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்க கால தாமதம் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக காவல்துறையில் 1999 ஆண்டு இரண்டாம் நிலை போலீசாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஜூன் 1 முதல் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி இதுவரை பதவி உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்துவதாக போலீசார் புலம்புகின்றனர்.
விருதுநகரில் உள்ள கால்நடை மருந்தகங்களில் 87 உதவி மருத்துவர்கள் இருக்க வேண்டும்.ஆனால் 55 உதவி மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.இதனால் மீதமுள்ள 32 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இந்நிலையில் கால்நடை உதவி மருத்துவருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் 31 பேர் மாவட்டத்தின் மருந்தகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கால்நடைகளுக்கான தேவையான மருத்துவம் தடையின்றி கிடைக்கும்.
ஜூன் 12ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று விருதுநகர் இரயில் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் மூலம் காலை 11.50க்கு ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள் செல்வி தலைமையிலும் இரயில்வே நிலைய மேலாளர் சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒண்டிபுலிநாயக்கனூர் ஊராட்சியில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஒப்பந்ததாரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பல்வேறு அறிவுறுத்தலை வழங்கினார்.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபாக்கியம் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று ஜெயபாக்கியம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வத்திரப் அருகே எஸ்.கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.இவரது மகன் ஜெகதீஸ் என்பவர் அத்திகோயில் பகுதியில் உள்ள தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து பார்த்து வருகிறார். கான்சாபுரம் -அத்திகோயில் சாலையில் பைக்கில் ஜெகதீஸ் சென்றபோது எதிரே வந்த வனராஜ் என்பவர் மோதியதில் பலத்த காயமடைந்து இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூமாபட்டி
போலீசார் நேற்று இரவு வனராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விருதுநகரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வருகின்ற 16ஆம் தேதி அன்று மாலை 4 மணி அளவில் உலக அமைதிக்காக கூட்டுத் தியானம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர் என அனைத்து தாலுகாக்களில் இருந்தும் கலந்து கொள்கின்றனர் என பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சிஸ்டர் செல்வி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.