India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 21ஆம் தேதி காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க 4000 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு 158 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 114 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 3 மாதத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு உயர்கல்வி சேருவதற்கான உதவிகள் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட பிற போதைப் பொருட்களை கடத்துபவர்கள், பதுக்குபவர்கள் , விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பல்வேறு குழுக்கள் அமைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளியில் பயின்று மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்த சஞ்சய்ராஜ் மற்றும் சிவ பிரியேசன் ஆகிய மாணவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க மாவட்ட அளவில் மாணவர்கள் தேர்வு போட்டிகள் நடைபெற்றது. இதில் 6 முதல் 8ம் வகுப்பு படிப்புக்கு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் 9 வகுப்பு முதல் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதிலும் இருந்து 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஜூன் 14ஆம் தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் நேற்று தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஜூன் 14ஆம் தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் எடுத்துக் கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு மனித சங்கிலியினை , மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும்/ இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. எனவே 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.