India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக நேற்று உயர்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிவகாசி மாநகராட்சி பகுதிகளான திருத்தங்கல் பேருந்து நிலையம், எம்எல்ஏ அலுவலகம், பழைய விருதுநகர் சாலை, மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிதாக ஆவின் பாலகம் அமைக்கப்பட்டது. இந்த ஆவின் பாலகம் ஒரு நாள் கூட செயல்படாமல் தற்போது வரை பூட்டியே கிடப்பதாக கூறும் பொதுமக்கள் இதனால் ஆவின் நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் எந்த பயனும் இல்லை என புலம்புகின்றனர் .
திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து அ.கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் காத்தமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் படியும், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல்கண்காணிப்பாளர் அசோகன் ஆலோசனையின் படியும், ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் சார்பில் ஜூன் 15ஆம் தேதி சைபர் குற்றங்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன் , துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்கள் மத்தியில் போலீசார் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள ஹோட்டல் பின்புறம் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் வீட்டிலிருந்து கிராஃபிக் டிசைனர் வேலை செய்து வருகிறார். மேலும் வீட்டின் அருகே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கோழிப்பண்ணைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் தற்போது வரை வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி மகேஸ்வரி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி, ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 18ம் தேதி திருத்தங்கல் நகர், செங்கமலநாச்சியார்புரம், கீழதிருத்தங்கல்,ஸ்டேட் பேங்க் காலனி, சாரதா நகர், பூவநாதபுரம், நடுவப்பட்டி,ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரார்பட்டி,அதிவீரன்பட்டி,நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பழனிச்சாமி புல்லலக்கோட்டை ரோடு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்குள்ள சுந்திரலிங்க நகரில் விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்த சிவ சபரி பாலன், யானை குழாய் தெருவை சேர்ந்த அழகர் உள்ளிட்ட 3 பேர் 30 கிராம் கஞ்சா, 2 அரிவாள் மற்றும் கத்தியுடன் நின்று கொண்டிருந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
விருதுநகர் ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநில நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படும் பட்சத்தில் வேகத்தடைகளை அமைத்த அமைப்பினர் தனிநபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 21ஆம் தேதி காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க 4000 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு 158 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 114 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 3 மாதத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.