India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாத்துார் விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள பள்ளத்தில் தேங்கிய கழிவுநீரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இச்சாலையில் தீப்பெட்டி பண்டல் ஏற்றி வரும் லாரிகள்,லோடு வேன்கள்,இருசக்கர வாகனங்கள் அடிக்கடி இவ்வழியாக நகருக்கு வந்து செல்கின்றன.சர்வீஸ் ரோட்டில் மிகப்பெரிய பள்ளம் உள்ள நிலையில் வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(ஜூன் 18) 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி, மின்னலுடன் கூடிய லேசனை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு போலீஸ் துறையில் 1999இல் இரண்டாம் நிலை போலீசாக பணியில் சேர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ் ஸ்டேஷன்களில் ஏட்டுகளாக பணியாற்றியவர்கள் எஸ்எஸ்ஐ பதவி உயர்வுக்காக காத்திருந்தனர். இவர்களுக்கு ஜூன் 1ல் வழங்க வேண்டிய பதவி உயர்வு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று 63 ஏட்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கி மதுரை டிஐஜி ரம்யா பாரதி உத்தரவிட்டார்.
விருதுநகர் காந்திபுரம் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது சகோதரர் சுந்தரம் என்பவரது பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 2 காலை 8 மணி அளவில் டீ குடிக்க செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் தற்போது வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் பாலமுருகன் எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் அவரது சகோதரர் சுந்தரம் இன்று மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் அருகே அல்லம்பட்டி ஆர்.எஸ்.நகர், பாலவனத்தம், மெட்டுகுண்டு, கடம்பன்குளம், செந்நெல் குடி அரச குடும்பம்பட்டி பொட்டல்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின் வாரியம் சார்பாக வாராந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வத்திராயிருப்பு பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, நேற்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வத்திராயிருப்பு மின்வாரிய அலுவலகம் அருகே வந்த ஆட்டோ மற்றும் பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது, புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓசூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி உள்ளிட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த புகையிலைகளை பறிமுதல் செய்தனர்.
சிவகாசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 18.06.2024 அன்று செவ்வாய்க் கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே நுகர்வோர்கள் மின்வாரிய பணிகள் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து, தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
சிவகாசி: எரிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்(28).இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த ஓராண்டுக்கு மேலாக தனியாக வாழ்ந்து வரும் நிலையில்,ஸ்ரீவி அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் கறிக்கடை அமைத்துள்ளர்.இன்று காலை கிருஷ்ணன் கோயில் தனியார் பார் அருகே உடலில் வெட்டு காயங்களுடன் பிரசாந்த் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிகின்றனர்.
சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் போலீசாக தீபா பணிபுரிகிறார். விருதுநகர் சூலக்கரை பகுதியில் வசித்து வரும் இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த ஞானமணி என்பவரது குடும்பத்திற்கும் குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின் போது காவலர் தீபா ஞான மணியை மட்டையால் தாக்கியதில் அவர் காயமடைந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கலை நிலா, காவலர் தீபாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தார்.
Sorry, no posts matched your criteria.