Virudunagar

News May 16, 2024

மகளிர் உரிமைத் தொகை: 3,27,830 பெண்கள் பயன்

image

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வாயிலாக விருதுநகர் மாவட்டத்தில் 3,27,830 குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர் எனவும், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் வாயிலாக 2954 நபர்களுக்கு ரூபாய் 1.89 கோடி மருத்துவ செலவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News May 16, 2024

கலைஞர் கனவு இல்லம் திட்டம்: 842 வீடுகள் ஒதுக்கீடு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சிகளுக்கும் முதற்கட்டமாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 842 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு 59 வீடுகள், காரியாபட்டி ஒன்றியத்திற்கு 31 வீடுகள், நரிக்குடி ஒன்றியத்திற்கு 92 வீடுகள், ராஜபாளையம் ஒன்றியத்திற்கு 261 வீடுகள், சிவகாசி ஒன்றியத்திற்கு 100 வீடுகள் என மொத்தம் 842 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

News May 15, 2024

விருதுநகர் : நாளை கனமழைக்கு வாய்ப்பு.

image

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 15, 2024

விருதுநகர்: மழைப்பொழிவு விவரம்

image

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவிலங்குளம், அருப்புக்கோட்டை KVK AWS ஆகிய பகுதிகளில் 8 செ.மீட்டரும், ராஜபாளையத்தில் 5 செ.மீட்டரும், ஸ்ரீ வில்லிப்புத்தூரில் 4 செ.மீட்டரும், சாத்தூர், திருச்சுழி ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் சிவகாசி , அருப்புக்கோட்டை, காரியபட்டி ஆகிய பகுதிகளில் 1செ.மீட்டரும் மழை அளவு பதிவானது.

News May 15, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு கனமழை

image

குமரிக் கடல் பகுதி அருகே வளிமண்டல சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் விருதுநகர், தென்காசி,தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 15, 2024

விருதுநகர்: பீகார் வாலிபர் மீது தாக்குதல்

image

பீகாரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(29). இவர் விருதுநகரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் தங்கி உள்ள இடத்தின் அருகே உள்ள தொட்டிக்கு மே 13ஆம் தேதி காலை குளிக்க சென்ற போது கேரளாவைச் சேர்ந்த சபிக், சிகாப் , ரியாஸ் ஆகிய 3 பேர் அப்துல் ரகுமானை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து அப்துல் ரகுமான் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நேற்று 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News May 15, 2024

விருதுநகரில் தேர்வு குழு கூட்டம் 

image

விருதுநகரில் 23-24 ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர்கள் விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அளப்பரிய பங்களிப்பை செய்த தனி நபர்கள், ஆலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றோருக்கு ஆண்டுதோறும் பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

News May 15, 2024

விருதுநகர்: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டம்

image

விருதுநகர், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பட்டாசு தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News May 14, 2024

விருதுநகர்: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

விருதுநகர்: I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைக்கும்

image

விருதுநகரில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், பட்டாசு விபத்துக்கள் குறித்து மத்திய அரசு கவனம் செலுத்துவது இல்லை, காங்கிரஸ் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது,விபத்து இல்லா பட்டாசு தொழில் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை மோடி கைவிட்டார். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

error: Content is protected !!