Virudunagar

News June 23, 2024

விருது பெற்ற சிவகாசி தன்னார்வலர்

image

கண் தானம் வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இதுவரை 4500-க்கும் மேற்பட்டோரிடம் கண்தானம் பெற்று சுமார் 16 ஆயிரம் பேருக்கு பார்வை கிடைக்கச் செய்த சிவகாசியை சேர்ந்த கண்தானம் கணேசன் சமூக சேவைக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இந்நிலையில் இவரது சேவையை பாராட்டி சென்னையில் நேற்று நடிகர் பாக்கியராஜ் தன்னலமற்ற அர்ப்பணிப்பிற்கான அகரம் 2024 விருது வழங்கி கண்தானம் கணேசனை பாராட்டினார்.

News June 23, 2024

ஆர்பாட்டம் நடந்த நீதிமன்றத்தில் மனு

image

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் மரணம் தொடர்பாக மாநில அரசை கண்டித்து விருதுநகரில் நாளை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ் குமார் தாக்கல் செய்த அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனு நாளை முதல் வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.

News June 23, 2024

குரூப் 1 தேர்வுக்கு 4 நாட்கள் மாதிரி தேர்வு

image

குரூப் 1 தேர்வுக்கு விருதுநகரில் 4 நாட்கள் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் நாளையும்(ஜூன் 23) அதை தொடர்ந்து ஜூன் 27 மற்றும் ஜூலை 3 , 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளோர் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News June 23, 2024

அரசு கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு

image

ஸ்ரீவி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் செய்தி குறிப்பில், இக்கல்லூரியில் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதன்படி ஜூன் 24ல் கணினி அறிவியலில் 260 முதல் 172 கட் ஆப் வரை உள்ளவர்களுக்கும், ஜூன் 25ல் வணிகவியலில் 340 முதல் 143 கட் ஆப் வரை உள்ளவர்களுக்கும், ஜூன் 26ல் தமிழில் 70 முதல் 36 கட் ஆப் வரையும் நடைபெற உள்ளது.

News June 22, 2024

பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறை

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோகன் உத்தரவின்படி, சிவகாசியில் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களுக்கு, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மீனா சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார். சைபர் குற்றங்களை தவிர்ப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.

News June 22, 2024

ஆட்சியர் தலைமையில் சிறப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி சேராத 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்ட மூன்றாம் கட்ட உயர் கல்விக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவர்களுடன் உயர்கல்வி குறித்து கலந்துரையாடினார்.

News June 22, 2024

விருதுநகர் மாவட்டத்தில் மழை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .

News June 22, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி முகாம்

image

விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான பயிற்சி முகாமில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளும் சட்டங்களும் திட்டங்களும் என்ற தலைப்பில் அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் பேசினார். தொடர்ந்து சந்தேகங்களுக்கு விளக்கமும் அளித்தார். மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News June 22, 2024

விருதுநகர் அருகே எம்பி நன்றி தெரிவிப்பு 

image

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் நேற்று வெற்றி பெற்ற டாக்டர். ராணி ஸ்ரீ குமாரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜபாளையம் நகரச் செயலாளர் மாரியப்பன்,நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன்,மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி சரவணன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் திமுக தெற்கு நகர செயலாளர் ராமமூர்த்தி, மகளிர் அணி மாவட்ட அமைப்பா சுமதி ராமமூர்த்தி உடன் இருந்தனர்.

News June 21, 2024

தாசில்தார் டிரைவர்கள் அதிரடி மாற்றம்

image

விருதுநகர் மாவட்டத்தில் சில தாசில்தார்களின் டிரைவர்கள் மீது அடுத்தடுத்து எழுந்த புகார்களின் காரணமாகவும், சில டிரைவர்களின் விருப்பத்தின் காரணமாகவும் 14 டிரைவர்களை இடம் மாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ராஜபாளையம் வெம்பக்கோட்டை சாத்தூர் சிவகாசி திருச்சுழி ஆகிய பகுதிகளைச் சார்ந்த 14 டிரைவர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!