Virudunagar

News May 21, 2024

விருதுநகர்:பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள் விழா!

image

சிவகாசியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நேற்று பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. சிவகாசி மாநகர மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்வில் பண்டிதர் அயோத்திதாசர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News May 20, 2024

விருதுநகரில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

image

விருதுநகரில் நாளை (மே.21) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி விருதுநகரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

விருதுநகர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

திருச்சுழி அருகே அகத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (19). இந்நிலையில் நேற்று  சிவா சொந்த வேலையாக பைக்கில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நரிக்குடி – திருச்சுழி சாலை அல்லாபாக்ஸ் உணவகம் அருகே எதிரே வந்த மற்றொரு பைக் மோதி சிவா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News May 20, 2024

விருதுநகர் அருகே யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா

image

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வைகாசி வசந்த விழா துவங்கி நடைபெற்று வரும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.திருக்கல்யாண வைபவம் முடிந்த நிலையில் இன்று மே 20 அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால சுவாமி யானை வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

News May 20, 2024

விருதுநகர் அருகே பணம் பறித்த நபர் கைது

image

திருச்சுழி அருகே கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(52). டீக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மே 19 அம்மன் பட்டியை சேர்ந்த மலைராஜ் (51) என்பவர் பெரிய இரும்பு கம்பியை காட்டி கொலை செய்து விடுவேன் என பாலசுப்பிரமணியனை மிரட்டி அவரிடமிருந்து ரூ 1,500 பணத்தைப் பறித்துச் சென்றுள்ளார். இது குறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் மலைராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.‌

News May 19, 2024

குறுந்தகவல் கனமழை எச்சரிக்கை 

image

விருதுநகர் மாவட்டத்தில் இருநாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுலா தளங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கவும் பேரிடர் மேலாண்மை துறை அனைத்து மக்களுக்கும்  குறுந்தகவல் அனுப்பியுள்ளது

News May 19, 2024

விருதுநகர் அருகே வெளுத்து வாங்கும் கனமழை

image

வெம்பக்கோட்டை தாலுகா உட்பட்ட ஏழாயிரம்பண்ணை சுற்று வட்டார கிராமப்புறங்களில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது.சரியாக 3 மணி அளவில் வானம் கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நீர்நிலைகள் இருக்கும் பகுதிகளில் மக்கள் செல்ல வேண்டாம் என தாலுகா தரப்பில் எச்சரிக்கை விடுத்தனர்

News May 19, 2024

விருதுநகரில் மருந்து வணிகர் சங்க கூட்டம்

image

விருதுநகர் தனியார் மண்டபத்தில் மாவட்ட மருந்து வணிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் பாலமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி மருத்துவர் முரளிதரன் கலந்து கொண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இக்கூட்டத்தில் மருந்து வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டன.

News May 19, 2024

விருதுநகர் பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி

image

விருதுநகர் மேற்கு தொடர்ச்சி மலையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் பொதுமக்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலா தலங்களுக்கு செல்வோர், பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க அறியுறுத்தப்பட்டுள்ளது.

News May 19, 2024

விருதுநகர்: சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர் கைது

image

சிவகாசி அருகே முத்துராஜபுரம் பகுதியில் நேற்று பட்டாசு விதிமீறல் தொடர்பான சிறப்பு ஆய்வு குழு ஆய்வு நடத்தியது. அப்போது சேர்மராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நடத்திய சோதனையில் வீட்டில் வைத்து அவர் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து சேர்மராஜை கைது செய்த போலீசார் அங்கிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!