India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறைக்கு கடிதம் மூலம் புகார் மனு வந்தது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மம்சாபுரம் அருகே நரையன்குளம் பகுதியில் உள்ள காட்டில் மான் கொம்புகளை பறிமுதல் செய்து மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்களில் இலவச களிமண் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விதிகளை மீறி இலவசமாக வண்டல் மண் எடுத்ததாக 3 வழக்குகள் மற்றும் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே முறைகேடு இன்றி இத்திட்டத்தை பயன்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விருதுநகர் அடுத்த R.R.நகரில் 26 வது ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் பங்கேற்றார். தொடர்ந்து நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு மத நல்லிணக்கத்தை எடுத்து வைக்கும் வகையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்களில் இலவச களிமண் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விதிகளை மீறி இலவசமாக வண்டல் மண் எடுத்ததாக 3 வழக்குகள் மற்றும் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே முறைகேடு இன்றி இத்திட்டத்தை பயன்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 172 இடங்களில் 315 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் முதல் கட்டமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும் பகுதிகளில் ஒரு ஏ.டி.எஸ்.பி, 12 டிஎஸ்பிக்கள் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அரசு மருத்துவமனையில், தேவேந்திர குல வேளாளர் இளைஞரணி சார்பில், இமானுவேல் சேகரனார் குருபூஜையை முன்னிட்டு ரத்ததானம் நடைபெற்றது.நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முகாமினை தொடங்கி வைத்தார். மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ், பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், வழக்கறிஞர் பாலச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமாவிற்கு சொந்தமான ஒருங்கிணைந்த சுகாதார மையத்தில் விரிவாக்கப்பட்ட கட்டட திறப்பு விழா வரும் செப். 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க உள்ள நிலையில், அவரிடம் திலகபாமா நேரில் அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தார். மேலும் அன்றைய தினம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வாழை பயிருக்கு காப்பீடு செய்வதற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பிரீமியம் தொகையாக ஒரு ஏக்கர் வாழைக்கு ரூபாய் 3404 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் செப்-16 ஆகும். கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பங்களை பெற்று பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே எஸ்.திருவேங்கிடபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது . இதில் கிராமத்தில் உள்ள அரசரடி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பணமாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ராஜபாளையம் சுரங்கப்பாதை பணிகள் காரணமா செங்கோட்டை – மதுரை ரயில் செப். 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டையிலிருந்து 50 நிமிடங்கள் கால தாமதமாக மதியம் 1 மணிக்கு புறப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சுரங்கப்பாதை பணிகளில் முக்கிய பணிகள் நிறைவு பெற்றதால் செப். 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டை -மதுரை ரயில் செங்கோட்டையிலிருந்து வழக்கமாக புறப்படும் நேரமான மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.
Sorry, no posts matched your criteria.