Virudunagar

News May 25, 2024

விருதுநகர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மத்திய அரசு சார்பாக தேசிய அளவில் வீர தீரமிக்க செயல் புரிந்தவர்களுக்கு டென்சிங் நார்கே விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு துணிச்சலான நடவடிக்கைகள் செய்தமைக்காக வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட உள்ளது. மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களை http://awards.gov.in மூலம் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.

News May 25, 2024

முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் பிரபு என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கடலில் மூழ்கி இறந்துள்ளார். அன்னாரது வாரிசுதாரரான அவரது தாய் தமிழ்ச்செல்வி என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் ஒரு லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார்.

News May 25, 2024

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அமைப்பு சாரா நிறுவனங்கள் தன்னார்வலர்கள் தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் ஆசிரியர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.

News May 25, 2024

விருதுநகரில் இலவச இருதய மருத்துவ முகாம்

image

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ஏகம் அறக்கட்டளை மற்றும் கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பாக இலவச இருதய மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டார்.

News May 25, 2024

தட்டச்சு தெருவில் நரிக்குடி மாணவிமுதலிடம்

image

நரிக்குடியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவரின் மகள் ரேணுகா மாநில அளவில் நடந்த தட்டச்சு தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். மாநில அளவில் நடந்த அரசு தட்டச்சு தேர்வில் ஹை ஸ்பீடு பிரிவில் 10 நிமிடம் தேர்வில் 67.5வார்த்தைகள் டைப் அடித்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

News May 25, 2024

ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் சிறப்பு!

image

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாக விளங்குகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் புராணக்கதைகளைக் கொண்டுள்ளது. மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்கையில் தமிழ்நாட்டின் சின்னமாக ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தின் தேர்தெடுக்கப்பட்டு சிறிது மாற்றத்துடன் கொண்டுவரப்பட்டது. இந்த 194 அடி ராஜகோபுரத்தை விஜயநகர மன்னர் பாரதி ராயர் கட்டினார்.

News May 25, 2024

விருதுநகர்:நோட்புக் கிடுகிடுவென விலை உயர்வு

image

குட்டி ஜப்பானிய என அழைக்கப்படும் சிவகாசி பட்டாசு தீப்பெட்டி அச்சகத்திற்கு பெயர் பெற்றதாக விளங்குகிறது. கோடை காலம் முடிந்து பள்ளி விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவர் மாணவியருக்கான நோட்புக் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காகிதம் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20% நோட்புக் விலை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News May 25, 2024

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2727 விண்ணப்பங்கள்!

image

மத்திய அரசு ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டினை ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் நர்சரி பிரைமரி பள்ளிகள் 86, மெட்ரிக் பள்ளிகள் 84 உள்ளன. இப்பள்ளிகளில் 1747 இடங்களுக்கு தற்பொழுது 2727 விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News May 24, 2024

விருதுநகரில் 16 இரட்டை குழந்தைகள்

image

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 2023 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 561 சுகப்பிரசவங்கள், 16 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 615 சுகப்பிரசவங்கள், 22 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2023 ஒப்பிடுகையில் கடந்த 4 மாதங்களில் 54 சுகப்பிரசவங்கள், 6 இரட்டை குழந்தைகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

நெஞ்சு வலியால் மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு

image

விருதுநகர் நகராட்சி சாலையில் வசித்து வருபவர் மூதாட்டி நளினா(62). மூதாட்டி தற்பொழுது யாரும் இல்லாமல் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மூதாட்டிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவரை அக்கம்பக்கத்தினர் மீது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!